அம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை!

தமிழில் புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம் ரன் நடிகை.

சென்னை: திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த ரன் நடிகை, தற்போது தமிழில் அடுத்த ரவுண்டிற்கு ரெடி ஆகிவிட்டாராம். இதனால் படவாய்ப்புகளுக்காக இயக்குநர்களுக்கு அவர் தூது விட்டு வருகிறாராம்.

சிலப்பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் ரன் நடிகை. சூப்பர் தவிர மற்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்த பெருமை இவருக்கு உண்டு. நடிப்பு, நடனம், கவர்ச்சி என எல்லாவிதத்திலும் நடிகை திறமைசாலி என்பதால் கை நிறைய படவாய்ப்புகள் குவிந்தன.

Run actress seeks for new chance

முன்னணி நடிகையாக இருந்தபோதே, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் நடிகை. தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தற்போது நடிக்கத் தொடங்கியுள்ளார். அதிலும் அவரது மனக்குறையை நீக்கும் விதமாக, சூப்பருடன் நடிக்கும் வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

இதனால் தமிழில் மீண்டும் ரவுண்டு வர முடிவு செய்து விட்டாராம் அவர். இதற்காக முன்பு போல் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பியூட்டியாக மாறியுள்ளாராம். அதோடு, தன் மாஜி ஹீரோக்களை மரியாதை நிமித்தம் சந்தித்தும் வருகிறாராம்.

மீண்டும் நாயகி வேடம் தான் வேண்டும் என அடம்பிடிக்காமல், அம்மா கதாபாத்திரம், வில்லி என எது கிடைத்தாலும் ஓகே என சிபாரிசு செய்ய அவர்களிடம் கேட்டுள்ளாராம். அதோடு, பல முன்னணி இயக்குநர்களுக்கும் படவாய்ப்புகள் தொடர்பாக தூது அனுப்பி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X