அப்பவே அப்படி.. இப்ப கேட்கவா வேணும்.. ஆளே மாறிப் போன ரன்னர் அப் நடிகை!

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லக்குட்டி நடிகையின் பந்தாவை தாங்க முடியாமல் தவிக்கிறார்கள் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்.

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லக்குட்டி நடிகை, தற்போது ஆளே மாறி விட்டாராம். தான் நடித்து முடித்துக் கொடுக்காமல் இருக்கும் பட இயக்குநர்களிடம் புதிது புதிதாக நிறைய கண்டிசன்கள் போடுகிறாராம். இதனால், அதிகம் பிரபலம் இல்லாத போது அவருக்கு வாய்ப்பு தந்த இயக்குநர்கள் நொந்து போய் உள்ளனர்.

தமிழில் தமிழ் எனத் தொடங்கும் படம் மூலம் அறிமுகமானவர் இந்த நடிகை. குழந்தைத்தனமான முகம், கவர்ந்திழுக்கும் சிரிப்பு என அழகாக இருந்தபோதும் நடிகைக்கு சொல்லிக் கொள்ளும் விதத்தில் அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை. இதனால் கிடைத்த சின்ன சின்ன படங்களில் எல்லாம் அவர் நடித்தார்.

அப்படி நடித்துக் கொண்டிருந்தபோது தான் எதிர்பாராதவிதமாக பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

சர்ச்சை நாயகி:

சர்ச்சை நாயகி:

அந்த வாய்ப்பு தானாக கிடைத்ததா அல்லது நடிகையாகவே போராடி பெற்றாரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் நடிகை. இதனால் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

புதுப்புது கண்டிசன்:

புதுப்புது கண்டிசன்:

தற்போது அவரது நிலையே மாறிவிட்டது. நிகழ்ச்சி தந்த புகழால், தன்னைத் தேடி வரும் இயக்குநர்களிடம் புதுப்புது கண்டிசன்கள் போடுகிறாராம். தான் முடித்துத் தர வேண்டிய படங்களையும் கண்டுகொள்ளவில்லையாம்.

வாரிசு நடிகர் படம்:

வாரிசு நடிகர் படம்:

வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறி வரும் நடிகை, அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மற்ற படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர்.

இதெல்லாம் ஓவர்:

இதெல்லாம் ஓவர்:

எப்படி இவரை நடிக்க வைத்து மீதிப்படத்தையும் எடுத்து வெளியிடுவது என யோசித்து வருகின்றனர். ஏற்கனவே நிகழ்ச்சியால் தனது பெயரை பெரிதும் கெடுத்துக் கொண்ட நடிகை, இப்படி நடந்து கொண்டால் சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறி தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X