சதாவின் காதலும் சதா காவலும்! காதலில் கட்டுண்டு பேர்யக் கிடக்கும் சதாவை, அதிலிருந்து மீட்கும் முயற்சியாகஅவர் எங்கே போனாலும் கூடவே அவரது அப்பாவும் பாதுகாப்பாக போய் வரஆரம்பித்திருக்கிறார்.தெலுங்கில் கிடைத்த ஜெயம் தமிழுக்கும் பரவவே, பலமாக காலூண்றுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்ட சதா, படு சாதாரணமாக முன்னேறத் தொடங்கி இன்று தேங்கிப்போய் நிற்கிறார்.கவர்ச்சிப் புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தடுமாறிப் போன சதா, சுதாரித்துக்கொண்டு அந்நயனில் கோடிட்டுக் காட்டினார், நானும் ரெடி என்று, ஆனால் ரண்டக்கரண்டக்க பாட்டு ஃபேமஸ் ஆன அளவுக்கு அவரது கிளாமர் எடுபடாமல் போய்விட்டது.அட, போங்கப்பா என்று சோர்ந்து போய் விட்டார் சதா. அப்படியெ தெலுங்குக்குப்போனவர் இப்போது அந்த பெரிசு பாலகிருஷ்ணாவுனும் மேலும் 2ல மூத்தநடிகர்களுடனும் மொத்தம் 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த 3 படங்களிலும் ஹீரோக்களுக்கு குறைந்தது 2 ஹீரோயின்கள் என்பதால் சதாசெகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார்.இவ்வாறாக தெலுங்கில் பெரிசுகளின் ஆதரவோடு வருமானம் பார்த்து வரும்சதாவுக்கு இந்த நேரம் பார்த்துத்தான் அந்தக் காதல் வந்து தொலைத்தது.சதாவை காதலால் சதாய்த்த அந்த நபர் பெங்களூரில் இருக்கிறாராம். இருவரும்ஆரம்பத்தில் நேரில் சந்தித்து நேர்த்தியாக காதலை வளர்த்துள்ளனர்.ஆனால் டாட்டரின் மேட்டர் டாடிக்குத் தெரிந்தபோது, வானம் விண்டது, வீடுஇரண்டு பட்டதாம்.காதலுக்கு அப்பா தடை போட்டதால் விரக்தியாகிப் போன சதா, போன் மூலம்காதலைத் தொடர்ந்தார். இதை அறிந்த அப்பா, சதா செல்லைத் தூக்கி காதில்வைத்ததும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ள, கடுப்பாகிப் போன சதா, காதல்மொழி பேச முடியாமல் அவதிப்பட ஆரம்பித்தார்.இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டதாம். சதாவுடனே, சதா இருக்கிறாராம்அவரது அப்பா.சதா எங்கே போனாலும் கூடவே போகிறாராம். அவரால் போக முடியவில்லைஎன்றால் வீட்டில் உள்ளவர்களை கொடுக்கு போல துணைக்கு அனுப்பிவைக்கிறாராம். இதனால் நொந்து போயுள்ளாராம் சதா.இந்த நேரம் பார்த்துத்தான் தமிழில் ஜூலைக் காற்றில் என்ற பட வாய்ப்பு சதாவுக்குக்கிடைத்தது. இப்படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் 40 நாட்களுக்குஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதாம்.(இந்தப் படத்தில் முதலில் சோனியா அகர்வாலைக் கூப்பிட்டார்கள். அவர்மறுத்துவிட்டார். இதையறிந்த சதா பல முயற்சிகள் எடுத்து இந்த வாய்ப்பைப்பிடித்தார்)எப்படியும் அப்பா 40 நாட்களும் கூட இருக்க மாட்டார், இருக்க முடியாது, கிடைக்கிறகேப்பில் காதலனை வரவழைத்து கடலையை கிலோ கணக்கில் வறுத்து விடவேண்டியதுதான் என்று சந்தோஷமாக இருக்கிறாராம் சதா.நடிகைகள் காதலிப்பது ரொம்பக் கஷ்டங்கோ!ரொம்ப முக்கியமான டெஸ்ட்:1. சதா என்ன படித்திருக்கிறார்?பிளஸ் டூ2. என்ன கார் வைத்திருக்கிறார்?டயோடா கரோலா3. இப்போது ரூ 1 கோடியில் சதா எங்கே வீடு கட்டி வருகிறார்?மும்பையில். மேலும் சென்னை, ஹைதராபாத்திலும் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார்.

By Staff

காதலில் கட்டுண்டு பேர்யக் கிடக்கும் சதாவை, அதிலிருந்து மீட்கும் முயற்சியாகஅவர் எங்கே போனாலும் கூடவே அவரது அப்பாவும் பாதுகாப்பாக போய் வரஆரம்பித்திருக்கிறார்.

தெலுங்கில் கிடைத்த ஜெயம் தமிழுக்கும் பரவவே, பலமாக காலூண்றுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்ட சதா, படு சாதாரணமாக முன்னேறத் தொடங்கி இன்று தேங்கிப்போய் நிற்கிறார்.

கவர்ச்சிப் புயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், தடுமாறிப் போன சதா, சுதாரித்துக்கொண்டு அந்நயனில் கோடிட்டுக் காட்டினார், நானும் ரெடி என்று, ஆனால் ரண்டக்கரண்டக்க பாட்டு ஃபேமஸ் ஆன அளவுக்கு அவரது கிளாமர் எடுபடாமல் போய்விட்டது.


அட, போங்கப்பா என்று சோர்ந்து போய் விட்டார் சதா. அப்படியெ தெலுங்குக்குப்போனவர் இப்போது அந்த பெரிசு பாலகிருஷ்ணாவுனும் மேலும் 2ல மூத்தநடிகர்களுடனும் மொத்தம் 2 படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த 3 படங்களிலும் ஹீரோக்களுக்கு குறைந்தது 2 ஹீரோயின்கள் என்பதால் சதாசெகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார்.

இவ்வாறாக தெலுங்கில் பெரிசுகளின் ஆதரவோடு வருமானம் பார்த்து வரும்சதாவுக்கு இந்த நேரம் பார்த்துத்தான் அந்தக் காதல் வந்து தொலைத்தது.

சதாவை காதலால் சதாய்த்த அந்த நபர் பெங்களூரில் இருக்கிறாராம். இருவரும்ஆரம்பத்தில் நேரில் சந்தித்து நேர்த்தியாக காதலை வளர்த்துள்ளனர்.

ஆனால் டாட்டரின் மேட்டர் டாடிக்குத் தெரிந்தபோது, வானம் விண்டது, வீடுஇரண்டு பட்டதாம்.


காதலுக்கு அப்பா தடை போட்டதால் விரக்தியாகிப் போன சதா, போன் மூலம்காதலைத் தொடர்ந்தார். இதை அறிந்த அப்பா, சதா செல்லைத் தூக்கி காதில்வைத்ததும் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ள, கடுப்பாகிப் போன சதா, காதல்மொழி பேச முடியாமல் அவதிப்பட ஆரம்பித்தார்.

இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டதாம். சதாவுடனே, சதா இருக்கிறாராம்அவரது அப்பா.

சதா எங்கே போனாலும் கூடவே போகிறாராம். அவரால் போக முடியவில்லைஎன்றால் வீட்டில் உள்ளவர்களை கொடுக்கு போல துணைக்கு அனுப்பிவைக்கிறாராம். இதனால் நொந்து போயுள்ளாராம் சதா.

இந்த நேரம் பார்த்துத்தான் தமிழில் ஜூலைக் காற்றில் என்ற பட வாய்ப்பு சதாவுக்குக்கிடைத்தது. இப்படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் 40 நாட்களுக்குஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளதாம்.


(இந்தப் படத்தில் முதலில் சோனியா அகர்வாலைக் கூப்பிட்டார்கள். அவர்மறுத்துவிட்டார். இதையறிந்த சதா பல முயற்சிகள் எடுத்து இந்த வாய்ப்பைப்பிடித்தார்)

எப்படியும் அப்பா 40 நாட்களும் கூட இருக்க மாட்டார், இருக்க முடியாது, கிடைக்கிறகேப்பில் காதலனை வரவழைத்து கடலையை கிலோ கணக்கில் வறுத்து விடவேண்டியதுதான் என்று சந்தோஷமாக இருக்கிறாராம் சதா.

நடிகைகள் காதலிப்பது ரொம்பக் கஷ்டங்கோ!

ரொம்ப முக்கியமான டெஸ்ட்:

1. சதா என்ன படித்திருக்கிறார்?

பிளஸ் டூ

2. என்ன கார் வைத்திருக்கிறார்?

டயோடா கரோலா

3. இப்போது ரூ 1 கோடியில் சதா எங்கே வீடு கட்டி வருகிறார்?

மும்பையில். மேலும் சென்னை, ஹைதராபாத்திலும் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X