பட்ஜெட் அதிகமாயிடுச்சு... 12 ஐ 10 ஆகக் குறைத்த பட நிறுவனம்!
தீபாவளிக்கு வெளியாகி மெகா ஹிட் அடித்திருக்கும் படத்துக்கு இயக்குநருக்கு பேசப்பட்ட சம்பளத்தில் கைவைத்துவிட்டதாம் பட நிறுவனம்.
படத்துக்கு முதலில் சொன்ன பட்ஜெட் வேறு... ஆனால் எடுக்க எடுக்க செலவு இழுத்துக்கொண்டே போனது. இதனால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் கூட நிறுவனத்துக்கு சில கோடிகள் இழப்புதான் வருமாம். அதைக் காரணம் காட்டி மீதம் கொடுக்க வேண்டிய இரண்டு கோடியை தர மறுத்துவிட்டதாம் நிறுவனம். பத்தே உங்களுக்குப் பெரிசு என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை ஹீரோவிடமும் கொண்டு செல்ல முடியாது. இயக்குநர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னபோதே அவர் அது உங்க பிரச்னை என்று தலையிட மறுத்துவிட்டார். எனவே ஹீரோவிடம் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.
Comments


Click it and Unblock the Notifications