சீனியர்ஸ் ரீஎன்ட்ரி... பெரிய தொகை கேட்டு பெரிய முதலாளியையே ஷாக் ஆக்கிய பிளாக் நடிகர்!
சென்னை: பெரிய முதலாளி வீட்டிற்கு விருந்தாளிகளாக தற்போது பழைய போட்டியாளர்கள் சிலர் சென்றுள்ளனர்.
கடந்த சீசனில் பெரிய முதலாளி வீட்டில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் பலர். அவர்களில் சிலர் கோடி ரூபாய் கொடுத்தால் கூட இனி அந்த வீடு இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்துப் படுக்க மாட்டோம் என்றார்கள்.
ஆனால், கடைசியில் தற்போது தினக்கூலியாக ரூ. 20 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு அங்கு விஜயம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

பிளாக் நடிகர்:
முதல் சீசனில் அடிதடி ரகளை செய்து பரபரப்பை ஏற்படுத்திய பிளாக் நடிகரையும் விருந்தினராக பெரிய முதலாளி அழைத்தாராம். ஆனால் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும், பெரிய முதலாளி நிகழ்ச்சியால் ரொம்பவே பேர் டேமேஜான அவர், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தந்தால் வருகிறேன் எனக் கறாராக கூறிவிட்டாராம்.

டீலா நோ டீலா:
ஆனால், இது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது என பெரிய முதலாளி கை விரித்து விட்டாராம். பிளாக் நடிகர் மட்டுமல்ல, தற்போது பிஸியாக உள்ள முன்னாள் போட்டியாளர்களும் இதைவிட அதிகமாகக் கேட்டதாக தகவல். இதனால் ரூ. 20 ஆயிரத்திற்கு ஓகே சொன்னவர்கள் மட்டும் வீட்டிற்குள் விஜயம் செய்துள்ளார்களாம்.

பேரை மாற்றணும்:
தற்போது வந்துள்ளவர்களில் நடனம் கடந்த முறை நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. வீட்டில் இருந்து வெளியில் சென்ற பின்னும் நடிகையின் செயல்கள் விமர்சிக்கப்பட்டன. இதனால் நொந்து போன அவர், இம்முறை எப்படியும் அப்பெயரை மாற்றியே தீருவது என்ற முடிவில் தான் ரீஎண்ட்ரி ஆகியுள்ளாராம்.

இதுவும் காரணம்:
கூடவே பெரிய முதலாளிக்கு செல்லப்பிள்ளையான கூல் நடிகைக்கும் அறிவுரை சொல்லவே இத்தனை பேர் அதிரடியாக நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பார்ப்போம் இவர்கள் அறிவுரையாவது நடிகையின் காதில் ஏறுமா என்று.


Click it and Unblock the Notifications











