»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராயின் வீட்டின் முன் இரவில் குடித்து விட்டு கலாட்டா செய்துள்ளார் நடிகர் சல்மான் கான்.

ஹம் தில் தே ஜுகே சனம் படத்தில் நடித்த போது உலக அழகிக்கும், சட்டைகளை வெறுக்கும் சல்மான் கானுக்கும் காதல்மலர்ந்தது. படத்தின் பெயரைப் போலவே தனது தில்லை (மனதை) ஐஸ்வர்யா ராயிடம் கொடுத்துவிட்டார் சல்மான் கான். இதில்சல்மான் கான் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் மிக நெருக்கமாகவே இருந்து வந்தாலும் காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்லை என்று திரையுலகில் அனைவருமேசொல்லும் புளித்துப் போன பொய்யையே தொடர்ந்து இவர்களும் கூறி வந்தனர்.

இந் நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கும் ஹாட்மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவுக்கும் காதல், வெளிநாட்டு தொழிலபதிபருடன்ஐஸ்வர்யாவுக்கு காதல் என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதனால், சல்மானை ஐஸ்வர்யா மெல்ல ஓரம் கட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் மும்பையில் லோகான்ட்வாலா பகுதியில் உள்ள ஐஸ்சின் வீட்டுக்கு வந்தார்சல்மான் கான். கான் அடிக்கடி ஐஸ் வீட்டுக்கு வருவது வழக்கம் தான். ஆனால், இம் முறை அவரை ஐஸ்வர்யா ராய் வீட்டினர்அவரை வீட்டுக்குள் விட மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இரவு முழுவதும் அங்கேயே நின்று ஐஸ்வர்யா வீட்டுக் கதவை தட்டிக் கொண்டே இருந்திருக்கிறார் சல்மான் கான்.இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. வியாழக்கிழமை அதிகாலை வரை சல்மானின் இந்த காதல் ஆவேசம் தொடர்ந்தது.

பின்னர் விடிந்த பின்னர் ரோட்டில் செல்பவர்கள் அனைவரும் பார்த்துவிடுவார்கள் என்பதால் அவரை வீட்டுக்குள் விட்டனர்ஐஸ்வர்யா குடும்பத்தினர். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே கோபமும் ஆத்திரமுமாகவெளியே வந்து காரில் ஏறிப் பறந்தார் சல்மான்.

இது குறித்து ஜூகு காவல் நிலையத்துக்கு தகவல் தரப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஐஸ்வர்யா வீட்டுக்கு பாதுகாப்பைஅதிகரித்துள்ளது காவல்துறை. இரவு நேர ரோந்தும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பல நடிகைகளும் நடிகர்களும் வசித்து வருகின்றனர். பல இரவுகளில் நடிகர்களால் பொதப மக்களுக்குப்பிரச்சனை ஏற்படுகிறது என்கிறது போலீஸ். குடித்துவிட்டு ரோட்டில் கத்துவது, கார்களை வெறித்தனமாக ஓட்டுவது என்று பலபிரச்சனைகள் இந்தப் பகுதி பொது மக்கள் சந்தித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil