வளந்த ஹீரோவுக்கு உலக நாயகன் மகளைப் பிடிக்கலையாமே!
சண்டக்கோழி நாயகனின் தன்னம்பிக்கையின் அளவு தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இப்போதெல்லாம் தான் தயாரிக்கும் படம் மட்டுமல்ல, நடிக்கும் படங்களின் அத்தனை விஷயங்களையும் அவரேதான் முடிவு செய்கிறாராம்.
சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர். அந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் உலகநாயகன் மகளைத்தான் ஒப்பந்தம் செய்தார்களாம்.
ஆனால் அவருடனான முதல் அனுபவம் நடிகருக்கு அவ்வளவாக உவப்பில்லை போலிருக்கிறது. அவருக்கு பதிலாக தன் ஆஸ்தான நாயகியைத் தேர்வு செய்திருக்கிறாராம்.
ஏற்கனவே இரு படங்களில் நடித்த வெற்றி ஜோடி இது. இவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என கோடம்பாக்கமே பேசுவதால், நடிகரின் முடிவுக்கு நோ அப்ஜெக்ஷன் சொல்லிவிட்டாராம் இயக்குநர்.
Comments


Click it and Unblock the Notifications