»   »  கெமிஸ்ட்ரி வேலைக்கு ஆகுமா? - பப்ளி நடிகை கோரிக்கையை நிராகரித்த சாண்டல் காமெடி

கெமிஸ்ட்ரி வேலைக்கு ஆகுமா? - பப்ளி நடிகை கோரிக்கையை நிராகரித்த சாண்டல் காமெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்க படத்துல சேர்ந்து நடிக்க ஆசைப்படறேன் என்று நேரடியாக நடிகை சொன்னதற்கு பார்க்கலாம் என்று சொல்லி விட்டாராம் சாண்டல் காமெடி.

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சத்தில் இருந்ததோடு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் பப்ளி நடிகை. சிவ நடிகருடன் ஜோடி போட நடிகைகள் தயங்கியபோது அவரோடு ஜோடி போட்ட முதல் முன்னணி நடிகை இவர் தான்.

சிவ நடிகர் ரேஞ்ச் இப்போது எங்கேயோ போய்விட்டது. நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் பழைய நண்பர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு வலைவீசி வருகிறார்.

அப்படி ஹீரோவாகி விட்ட முன்னாள் காமெடியனான சாண்டலுக்கும் போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறாராம். அதற்கு சாண்டல் 'ஆல்ரெடி அண்ணன் தங்கச்சியா நடிச்சிட்டோம். ஜோடியா கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுமான்னு சந்தேகமா இருக்கு. பார்க்கலாம்' என்று பதில் சொல்லிவிட்டாராம்.

இப்படி ஆகி விட்டதே நிலைமை என்று புலம்புகிறாராம் நடிகை.

English summary
Sandal actor rejected bubbly actress's proposal to pair with him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil