»   »  சம்பளத்தை ஏற்றிய சந்தியா !

சம்பளத்தை ஏற்றிய சந்தியா !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தியா சம்பளத்தை ஏற்றி விட்டாரம். சில ஆயிரங்களே வாங்கிக் கொண்டு காதல் படத்தில் நடித்த சந்தியாவின் இப்போதையசம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மென், 10 லட்சம்தான்!

காதல் படத்தில் சந்தியாவை நடிக்க வைத்த இயக்குநர் ஷங்கர், சந்தியாவுக்குக் கொடுத்த சம்பளம் சில ஆயிரம்தான். காதல் படம்ஓடாத ஓட்டம் ஓடி சந்தியாவை ஓவர் நைட்டில் பெரிய ஆளாக்கி விடவே, இப்போது அவரது கை நிறையப் படங்கள்.

படங்கள் அதிகம் வந்தால்தான் ஆட்டோமேட்டிக்காக நம்ம ஊர் நாயகிகள், சம்பளத்தை ஏற்றி விடுவார்களே, அதற்கு சந்தியாமட்டும் விதி விலக்கா என்ன, அவரும் ஏற்றி விட்டார்.

மலையாளத்தில் அவர் நடித்த ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் படத்தில் அவரது சம்பளம் 2 லட்சமாம். அங்கே 2 லட்சம் என்பதுதமிழில் 20 லட்சத்திற்குச் சமம். தாய் மொழியான மலையாளத்தில் தனது சம்பள உயர்வை அமல்படுத்திய சந்தியா இப்போதுதமிழில் அதை விட ஐந்து மடங்குக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

சிம்புவுடன் அவர் நடிக்கப் போகும் வல்லவன் படத்தில் சந்தியாவுக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம். இனிமேல்தனது சம்பளம் 10 லட்சம் என்று சந்திக்க வரும் தயாரிப்பாளர்களிடமும் சந்தியாவும், அவரது அம்மாவும் கூறி வருகிறார்களாம்.

வல்லவன் நன்றாக ஓடினால் அப்படியே மேலே 5 லட்சத்தை ஏற்றவும் திட்டமிட்டிருக்கிறாராம் சந்தியாவின் அம்மா. இனிமேல்எனது மகளுக்கு ஏறுமுகம்தான், எனவே சம்பளத்தையும் ஏற்ற வேண்டியதாகப் போச்சு என்று ரொம்பவே அலுத்துக் கொள்கிறார்அம்மா.

அது சரி, காத்துள்ளபோதே அடிச்சுத் தூள் கெளப்பி அள்ளிக்க வேண்டியதுதானே!

Read more about: sandhya rises her salary

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil