»   »  கூட கேக்கும் சந்தியா!

கூட கேக்கும் சந்தியா!

Subscribe to Oneindia Tamil

கூடல் நகர் படத்தில் பாவனாவுக்கு இணையாக தனக்கும் காட்சிகளை வைக்க வேண்டும் என சந்தியா சத்தாய்க்கஆரம்பித்துள்ளாராம்.

லொட லொட பாவனா, மொட மொட சந்தியா, இணைந்து பரத்துடன் நடிக்கும் படம்தான் கூடல் நகர். சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படம் இடைக்காலத்தில் தேக்கமடைந்து கிடந்தது. இப்போது படுவிறுவிறுப்பாக ஷூட்டிங் நடக்க ஆரம்பித்துள்ளது.

பாவனாவுக்கும், சந்தியாவுக்கும் இதில் சம வேடங்கள் என்றுதான் முதலில் கூறப்பட்டதாம். ஆனால் இப்போதுபாவனாவுக்கு தூக்கலாகவும், தூளாகவும் பல காட்சிகளை வைத்துள்ளாராம் சீனு. சந்தியாவுக்கு கிட்டத்தட்ட 2வதுநாயகி லெவலுக்கு கேரக்டரை குறைத்து விட்டார்களாம்.

இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் பரத் என்று குசுகுசுகிக்கிறார்கள். பரத்துடன் சீக்கிரமாகப் பேசி குளோஸ்தோஸ்த் ஆகி விட்டாராம் பாவனா. இதற்கு கைமாறாக, தனது வேடத்தை ஸ்டிராங் பண்ணச் சொல்லுமாறு பரத்மூலம் சீனுவை ரெக்கியுள்ளார் பாவனா. அவரும் சரிதான் என்று பாவனா ரோலை பாலிஷ் செய்து விட்டார்.

மேட்டரைக் கேள்விப்பட்ட சந்தியா கடுப்பாகி விட்டாராம். சீனுவைக் கூப்பிட்டு எனக்கும், பாவனாவுக்கும்சமமான அளவில்தான் கேரக்டர் இருக்க வேண்டும். அவருக்கு கூடுதலாக வைத்தால் எனக்கும் அதேபோலவைக்க வேண்டும் என்று முணங்கியுள்ளாராம்.

இரு பாவைகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இப்போது சீனு தவிப்புக்குள்ளாகியுள்ளாராம். இருந்தாலும்சந்தியாவையும் திருப்திப்படுத்தும் வகையில் அவருக்கும் கூடுதல் காட்சிகளை வைப்பார் என்கிறது யூனிட்வட்டாரம்.

பரத் குறித்தும் ஒரு குட்டிச் செய்தி. சார், யார் கூட நடிச்சாலும் அந்த ஹீரோயினுடன் படு நெருக்கமாக பழகிவிடுகிறாராம். அத்தோடு அந்த ஹீரோயினையும், தன்னையும் பற்றி நிறைய செய்திகள் வர வேண்டும் எனவும்ஆசைப்படுகிறாராம். அதன்படியே செய்திகளையும் கிளப்பி விடுவதில் பார்ட்டி கில்லாடியாம்.

இவரையும், கூட நடித்த நடிகைகளையும் இணைத்து வரும் செய்திகளுக்கெல்லாம் மூலம் இவராகத்தான்இருக்கிறதாம்.

அட்ரா சக்கை!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil