»   »  குறையாத சந்தியா!

குறையாத சந்தியா!

Subscribe to Oneindia Tamil

ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் உடம்பைக் குறைத்து விட வேண்டும் என்று சொல்லியும், சந்தியா அதைக் கண்டுகொள்ளாமல் கண்டமேனிக்குகுண்டாகி வருவதால் அவரைப் புக் செய்த தயாரிப்பாளர் டென்ஷனாக உள்ளார்.

காதல் வந்தபோது அடுத்த சாவித்ரி, எதிர்கால சரோஜா தேவி, வருங்கால பானுமதி என ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளி விட்டனர் சந்தியாவை. ஆனால்காதல் படத்துக்குப் பிறகு படு மெதுவாக ஓடிக் கொண்டுள்ளார் சந்தியா.

சந்தியா நடிக்கும் படங்கள் எல்லாம் சொல்லி வைத்தது போல படு நிதானமாக வளருவது ஒரு முக்கிய காரணம் என்றால், சந்தியாவின் உடல் பருமன்இன்னொரு முக்கிய காரணம்.

காதல் படத்தில் பார்த்தது போல இப்போது சந்தியா இல்லை. சகட்டு மேனுக்கு சைட் டயர் போட்டு செம குண்டாக உள்ளார். இப்படியே போனால்டயர் ஸாரி.. மார்க்கெட் வெடித்துவிடும் என்று நலம் விரும்பிகள் எச்சரிக்கவே, இடையில் கொஞ்சம் போல உடம்பைக் குறைக்கும் முயற்சிகளில்இறங்கினார்.

கொஞ்சம் போல உடம்பு குறைந்ததும், அட நானும் ஸ்லிம் ஆகி விட்டேன் என்று ஆச்சரியப்பட்டு எக்சர்ஸைஸை விட்டு விட்டார். இதனால்மறுபடியும் உடம்பு உப்ப ஆரம்பித்து விட்டது.

அவரை சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் பார்த்து தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார். சரி என்று சொல்லி சந்தியா, 15 லட்சம் நம்ம சம்பளம் என்றுகூசாமல் கேட்டுள்ளார். கதி கலங்கிப் போன தயாரிப்பாளர் அப்படி இப்படிப் பேசி பத்துக்கு முடித்துள்ளார்.

முடித்த கையோடு ஒரு கண்டிஷனையும் போட்டாராம். ஷூட்டிங் போவதற்குள் உடம்பைக் குறைத்து விட வேண்டும். இதே உடம்போடு நடித்தால்படம் படுத்து விடும் என்று கூறியுள்ளார். அப்போதைக்கு சரி என்று மண்டையை ஆட்டி வைத்த சந்தியா அவர் போன பிறகு அதை அப்படியேமறந்து விட்டாராம்.

ஷூட்டிங் நாள் நெருங்கி வரும் நிலையில், சந்தியா அப்படியே இருப்பதை பார்த்த தயாரிப்பாளர் பற்களை நறநறவென்று கடித்தபடி, என்னசெய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டுள்ளாராம்.

அடப் பரிதாபமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil