சங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...
Recommended Video

சென்னை: சங்கத் தலைவரின் பேச்சை அவர் காதலியே கேட்காதபோது மற்றவர்களை எப்படி கேட்க வைப்பார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
விருது விழாக்களில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வது புதிது அல்ல. விருது விழாக்கள் வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுவதால் அதன் பலனை நடிகர், நடிகைகளும் அனுபவிக்க வேண்டும் என்று தென்னந்திய நடிகர் சங்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.
இது குறித்து அண்மையில் அண்டை மாநிலத்தில் நடந்த விருது விழா ஏற்பாட்டாளர்களிடம் கூற அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த விழாவை புறக்கணிக்குமாறு சங்கத் தலைவர் நடிகர், நடிகைகளை கேட்டுக் கொண்டார்.

நன்றி
தலைவரின் பேச்சை மதித்து சர்ச்சை நடிகை, விரல் வித்தை நடிகர், சேது நடிகர், தம்பி நடிகர் ஆகியோர் விருது விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தலைவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

நடிகர்கள்
சீனியர் ஆர்டிஸ்டுகளின் ஓய்வூதியத்திற்காக தான் இந்த புதிய ஏற்பாடு. சங்கத்தின் முடிவை மதித்து விருது விழாவை புறக்கணித்த கலைஞர்களுக்கு நன்றி என்று தலைவர் கூறியுள்ளார்.

விழா
சங்கத் தலைவரின் காதலி என்று கூறப்படும் வாரிசு நடிகை அந்த விருது விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு தான் அணிந்து சென்ற சேலை மிகவும் பிடித்திருந்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.

மற்றவர்கள்
காதலியே சங்கத் தலைவரின் பேச்சை மதிக்காமல் விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்படி இருக்கும்போது மற்றவர்கள் எப்படி அவர் பேச்சை மதிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications










