»   »  சங்கவி கவுன்சிலிங்?

சங்கவி கவுன்சிலிங்?

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடிகை சங்கவிக்கு அவசர கவுன்சிலிங் ஒன்றை நடத்தி, அவரது மன உளைச்சலைப்போக்கியுள்ளனராம்.

விஜய்யின் ஆரம்ப காலப் படங்களின் ஆஸ்தான நாயகியாக இருந்தவர் சங்கவி. விஜய் படம் என்றாலேசங்கவிதான் ஹீரோயின் என்ற நிலை அப்போது இருந்தது. விஜய்யின் சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தசங்கவி பிறகு பிரஷாந்த், அஜீத் என வளர்ந்து வந்த பிற நடிகர்களின் படங்களிலும் ஜோடியாக நடித்தார்.

கேரள, மும்பை நடிகைகளின் படையெடுப்பால் சங்கவிக்கு மார்க்கெட் போனது. தாய் மொழியானகன்னடத்திலும், தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சங்கவி. அதிலும் பெரிய அளவில்வாய்ப்புகள் வராததால், மீண்டும் தமிழுக்கேத் திரும்பி கிடைத்த ரோல்களில் நடித்து வந்தார்.

குத்துப் பாட்டு, கமல்ஹாசனின் படத்தில் ரமேஷ் அரவிந்துக்கு ஜோடி என குட்டிக் குட்டி ரோல்களில் வந்துபோனார் சங்கவி. எதுவும் எடுபடவில்லை. இதனால் சமீப காலமாக படம் இல்லாமல் வீட்டோடு இருந்தார்சங்கவி.

இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானாராம். மேலும்,சமீபத்தில் நடந்த திரையுலக திருமண விழாவுக்கு சங்கவி வந்திருந்தார். படு அழகாக, பிரமாதமான உடையுடன்அவர் வந்தும் கூட அவரை கண்டுகொள்ள, வரவேற்று உட்கார வைக்க ஆள் இல்லையாம்.

இதனால் தானே இருக்கையைத் தேடிப் போய் உட்கார்ந்து கொண்டு திருமண நிகழ்ச்சியை பார்த்து விட்டுத்திரும்பிச் சென்றாராம் சங்கவி.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தோம். ராஜ மரியாதை செய்தார்கள். இப்போது சீந்தக் கூட யாரும்இல்லையே என்று மனதுக்குள் மருகிப் போனாராம் சங்கவி. அவரது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒருமூத்த நடிகர்தான், சங்கவி அருகே போய் அமர்ந்து அவரிடம் ஜாலியாகப் பேசி சகஜ நிலைக்குக் கொண்டுவந்தாராம்.

சங்கவி பெரும் விரக்தியில் இருந்து வரும் தகவல் நடிகர் சங்க நிர்வாகிகள் காதுக்குப் போயுள்ளது. பலநடிகைகளின் தற்கொலைச் சம்பவத்தைப் பார்த்து விரக்தியாகிப் போயுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள், அப்படி ஒருசம்பவம் நடந்து விடக் கூடாதே என்று அலறிப் போய், சங்கவியை சென்னைக்கு வரவழைத்தனாரம்.

நடிகர் சங்க அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட சங்கவியிடம் சங்க நிர்வாகிகள் பேசியுள்ளனர். மன நலடாக்டர்களையும் வரவழைத்து கவுன்சிலிங் செய்தனராம். இதன் விளைவாக மன உளைச்சல் விலகி தற்போதுநிம்மதியாக உள்ளாராம் சங்கவி.

அந்தோ பரிதாபம்!

Read more about: sangavi got counseling
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil