»   »  முழு விபரம்

முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சினிமாவில் மார்க்கெட் இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது சைடு பிசினஸ். இதில் இப்போது காசு மேல் காசு அள்ளத்தொடங்கிவிட்டார்கள் நம்ம சங்கவி உட்பட பல குத்தாட்ட நடிகைகள்.

அது என்ன சைடு பிசினஸ் என்று தானே கேட்கிறீர்கள்.

மேட்டருக்கு வருவோம். சிங்கிள் பாட்டுகளுக்கு கெட்ட ஆட்டம் போடும் மும்பை வரவுகளில் சில சென்னை ஸ்டார்ஹோட்டல்களில் காபரே ஆட்டம் போட்டு சைடிலும் பணம் பார்க்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்பு சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி என குலுக்கல் நடிகைகள் கொடி கட்டிப் பறந்தார்கள். அவர்களதுஆட்டம் இருந்தால்தான் படம் போணியாகும் என்ற நிலைமை. அந்தப் பொற்காலம் கோலிவுட்டில் திரும்பிக் கொண்டிருக்கிறது.

முன்னணி ஹீரோயின்கள் பலரும் சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட வந்துவிட்டதால், இந்த டான்ஸ் சான்ஸ் கிடைப்பதும் சிலநேரம் குதிரைக் கொம்பாகி விடுகிறது.

இதனால் ராக்கி சாவந்த், ரகஸ்யா உள்ளிட்ட மும்பை அணு குண்டுகள், சினிமாவில் சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதோடு, சைடில்வேறு ஒரு பிசினஸிலும் இறங்கியிருக்கிறார்கள். அதுதான் ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம் போடுவது.

இதில் முன்னணியில் இருப்பவர் யார் தெரியுமோ? நம்ம சீனா தானா ரகஸ்யா தான். அவருக்கு அடுத்த இடத்தைப்பிடித்திருப்பவர் நம்ம சங்கவி. ஆமாங்க, சங்கவியே தான். இவர்கள் மட்டுமல்லாது கிரண் போன்ற நடிகைகளும் ஹோட்டலில்ஆடத் தொடங்கியுள்ளார்களாம்.

இதன் மூலம் வாராவாரம் லம்ப்பாக ஒரு பெரிய அமெளண்ட்டை பார்த்துவிடுகிறார்களாம்.

ரகஸ்யா சென்னைக்கு ஷூட்டிங் வரும்போதெல்லாம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பெல்லி டான்ஸ் போட்டு விடுவாராம்.சமீபத்தில் இதே ஹோட்டலில் ரகஸ்யாவுக்கும், கிரண், சங்கவிக்கும் இடையே கவர்ச்சி மோதல் நடந்தேறியதை ஏற்கனவேஉங்களுக்கு "வெலாவாரியாக" கூறியுள்ளோம்.

ஹோட்டல் டான்ஸ் ஆடும் நடிகைகளின் பட்டியல் விரைவில் நீளும் வாய்ப்பும் உள்ளதாம். காரணம் சினிமாவில் குத்தாட்டம்போடும் நடிகைகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் அமோக வரவேற்புதான்.

வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு. ஹோட்டலுக்கு வரும் சில "பெரிய இடத்து தொடர்புகளையும் கபால் என படித்துக்கொள்ளலாம் என்பதால் இதில் ஆர்வம் காட்டும் நடிகைகள் பட்டியலும் நீளமாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க டைரக்டர் ரமணாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியிலிருந்து மீண்ட சங்கவி, திருமணம் செய்து கொள்ளமுடிவெடுத்துள்ளாராம். மைசூரைச் சேர்ந்த இவருக்கு பெங்களூரில் பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. நல்லமாப்பிள்ளை இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

ரகஸ்யாவைப் பொறுத்தவரை மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் பெல்லி டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி கிரேஸ்உண்டு. இதனால் வார இறுதி நாட்களில் அவருக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து கூட்டிச் செல்கிறார்கள்மும்பைவாலாக்கள்.

தமிழில் ஒரு பாட்டுக்கு ஆட ரகஸ்யா வாங்கும் பீஸ் தெரியுமோ.. வெறும் ரூ. 12 லட்சம் தான் ஜென்டில்மென். டிவி விளம்பரப்படமா.. அதற்கும் ஓகே. ஒரு வார சூட்டிங் என்று பிக்ஸ் செய்து கொண்டு ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் கேட்கிறார்.

இவரது கால்ஷீட் விவகாரங்கள், பெல்லி டான்ஸ் புக்கிங், ஹோட்டல் டான்ஸ் பார்ட்டிகள் என சகலத்தையும் கவனிப்பது அவரதுமேனேஜர்-கம்-பாய் பிரண்ட்.

அட சே.., எதுல தான் டூ-இன்-ஒன் என்று விவஸ்தையே இல்லாம போச்சுப்பா.

கிரணைப் பொறுத்தவரை நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஹோட்டல்களில் பார்ட்டி வைத்து, மடக்கி, சான்ஸ் கேட்டு, கேட்டேகாசெல்லாம் போச்சு. இதனால் ஹோட்டல்களில் இழந்த காசை அதே ஹோட்டல்கள் மூலமாக ஈட்டிவிடும் முயறிசியில்இறங்கிவிட்டார்.

இதனால் தான் வீக் எண்ட் பார்ட்டிகளில் ஆட்டம் ஆடிவிட்டு காசை வாங்கிக் கொண்டு ஊருக்குப் போய்விடுகிறார்.

சினிமா இருக்கோ இல்லையோ, எப்படியாவது ஆடிக் கொண்டிருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்இந்த நடிகைகள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil