»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

நடிகரும், நடிகையும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர்.

முன்னாள் மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்ற நடிகர் சரத்குமார் இன்னமும் இளைஞிகளின் தூக்கத்தைக் கெடுப்பவர். ஏற்கனவே மும்பையிலிருந்து வந்தகவர்ச்சி ராக்கெட் நக்மாவுடன் காதல் ஏற்பட்டு, தனது மனைவி சாயாவை விவாகரத்து செய்யும் வரை போனார்.

பின்னர் லடாய். நக்மாவைப் பிரிந்தார். அதற்குப்பின் நடிகர் அஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த நடிகை ஹீராவை திருமணம் செய்யப் போகிறார் என்றவதந்தி பரவியது. அதுவும் பொய்யாகிப் போனது.

பின்னர் தன் சொந்த மனைவி சாயாவுடன் இணைந்தார். ராதிகா ஏற்கனவே இயக்குநர் பிரதாப்பைத் திருமணம் செய்து டைவர்ஸ் கொடுத்து அனுப்பி விட்டுலண்டன் ரிச்சர்டை மணந்தார். அதற்குப் பின் வழக்கம்போல் பிரிவு.

இந்த நிலையில் ராதிகா தன்னுடைய ராடன் டிவி நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சன் டி.வியில் நடத்த ஆரம்பித்தார். இதன் நிகழ்ச்சிதொகுப்பாளராக சரத்குமாரை, ராதிகா நியமித்தார்.

அதற்கும் முன்னதாகவே கார்கில் போர் நடந்த சமயத்தில் கலை உலக பிரமுகர்கள் மதுரையில் நட்சத்திர கலை இரவு நடத்தி நிதி திரட்டி ராணுவவீரர்களுக்கு அளித்தனர். அப்போது ரொம்ப க்ளோசாகப் பழகிய ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாம்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கோலிவுட்டில் ஹாட்டாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சிலர் இன்னும் ஒரு படி மேலேபோய் ராதிகாவும், சரத்குமாரும் கடந்த 23 ம் தேதி மோதிரம் மாற்றி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக பேசிக் கொள்கிறார்கள்.

விரைவில் இருவரும் தங்கள் திருமணத்தை முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியுலகுக்கு அறிவிப்பார்களாம்.

சித்தியை திருமணம் செய்து கொண்டது உண்மையா? நாட்டாமைதான் விளக்க வேண்டும்.

Read more about: cinema radhika sarath kumar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil