திடீரென பெரிய படங்களில் கமிட் ஆகும் நடிகர்.. எல்லாத்துக்கும் காரணம் இரண்டாவது மனைவி தானா?
சென்னை: நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும், அந்த நடிகர் பெரிதாக சோபிக்கவே இல்லை. பெரிய படங்களும் கிடைக்காமல் லோ பட்ஜெட் படங்களிலேயே நடித்து வந்தார்.
ஆனால், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அந்த நடிகருக்கு பெரிய பட வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன.
இதில் வெறும் அதிர்ஷ்டம் மட்டும் இல்லை என்றும் இரண்டாவது மனைவியின் கைங்கரியமும் நிறையவே உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

பந்தா பார்ட்டி
நல்ல நடிகராக இருந்தாலும், ஆள் ரொம்பவே பந்தா பார்ட்டி தான். ஷூட்டிங் போனாலே ஏகப்பட்ட பாடிகார்டுகளுடன் திமிராக சென்று இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் நடுங்க வைப்பார். அதன் காரணமாகவே அந்த நடிகரை பல முன்னணி இயக்குநர்களும் தவிர்க்க ஆரம்பித்தனர்.

மனைவியுடன் விவாகரத்து
ஒரு குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் குடி போதைக்கு மொத்தமாக அடிமையாக இருந்த அந்த நடிகருக்கு பிரபலமான பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

2வது திருமணம்
அந்த பிரபலமான பெண்ணை நடிகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதில் இருந்து அவருக்கு அதிர்ஷ்ட லட்சுமி வாசக் கதவை தட்டிக் கொண்டே இருப்பதாக உணர்கிறார். தொடர்ந்து பல பெரிய பட வாய்ப்புகளும் வெற்றிகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் உச்ச நட்சத்திரத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவரது 2வது மனைவி மூலமாகவே அவருக்கு கிடைத்திருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

இயக்குநருடன் நட்பு
தனது படத்தின் ஹீரோவையே ஃபைனல் செய்ய முடியாத நிலையில், குழம்பித் தவித்து வந்த அந்த இயக்குநர் தனது கவலைகளை தோழியுடன் புலம்ப உடனடியாக தனது கணவரிடம் பேசி கால்ஷீட் வாங்கித் தருகிறேன் என இரண்டே நாட்களில் அந்த டீலை முடித்துக் கொடுத்ததே நடிகரின் மனைவி தான் என்கின்றனர்.

பக்கத்து ஸ்டேட் படம்
முன்னதாக தனது கணவருக்காக பக்கத்து ஸ்டேட் முன்னணி நடிகர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இரண்டாவது மனைவி தான் ஏற்படுத்திக் கொடுத்தார் என்றும் சினிமா உலகில் கணவரை விட அவருக்கு ஏகப்பட்ட செல்வாக்கு உள்ளதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











