பிரபல நடிகைக்கு சீட் இல்லையா?.. மாஸ் ஹீரோவுடன் ரகசிய மீட்டிங்.. அதிரடியான அரசியல் ஆட்டம்!
சென்னை: ஆளும் கட்சியின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் டெல்டா மண்டல சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தலைவராக இருக்கும் முன்னணி நடிகர் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்து இருக்கும் நிலையில், அந்த இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் ஒரு பிரபல ஹீரோயின் பெயர் அடிபட்டது. ஏற்கனவே அந்த நடிகை பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். மேலும், ஆளும் கட்சியின் தலைவருடனும் அவருக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் நீண்ட காலமாக கிசுகிசுக்கள் இருந்து வருகின்றன. இதனால், அவரை அரசியலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், நேரடியாக இடைத்தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

டாப் நடிகருடன் ரகசிய மீட்டிங்: அதே நேரத்தில், மற்றுமொரு அதிரடி தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ஒரு நடிகர் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான ரகசிய பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அந்த நடிகரின் குடும்பம் சமூக சேவைகளை செய்து வருவதால் இது அந்த கட்சிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால், கூடிய விரைவில் அந்த நடிகர் கட்சியில் இணையப் போவதாகவும், இடைத்தேர்தலிலேயே நேரடியாக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சீட் இல்லையா: மற்றுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த நடிகரை நேரடியாக இடைத்தேர்தலில் களமிறக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடப்போது "முன்னணி நடிகையா? இல்லை மாஸ் ஹீரோவா?" என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இரண்டு பெரிய திரை நட்சத்திரங்களின் பெயர்களும் ஒரே தொகுதியை சுற்றி பேசப்படுவதால், இது சாதாரண இடைத்தேர்தலாக இல்லாமல் அனைவரும் கவனிக்கும் அரசியல் போட்டியாக மாறும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications