டாப் நடிகையின் கழுத்தில் தாலி.. அரசியல் புள்ளியுடன் ரகசிய திருமணம்.. முட்டுக்கொடுக்கும் பிரபலம்!

சென்னை: சினிமாவில் எத்தனையோ கிசுகிசுக்கள் வரும், போகும். ஆனால், கோலிவுட் தொடங்கி கோட்டை வரை ஒட்டுமொத்த தமிழகத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு காதல் விவகாரம் என்றால், அது அந்த எவர்கிரீன் நடிகைக்கும்,அரசியல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த மாஸ் விவிஐபி-க்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் கதைதான். ஏற்கனவே இவர்களைப் பற்றிப் புகைத்து கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி, புது பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது.

ரகசியத் திருமணமா?: சமீபத்தில் அந்த முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த போட்டோவை உற்று பார்த்த நெட்டிசன்ஸ் அந்தப் புகைப்படத்தில் நடிகையின் கழுத்தில் கேரள கிறிஸ்தவப் பாரம்பரியத்தைச் சேர்ந்த தாலி போன்ற ஒரு செயின் பளபளப்பாக மின்னியது. இதைப் பார்த்ததுமே ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அந்த விவிஐபியும், இந்த நடிகையும் ரகசியத் திருமணம் செய்துகொண்டார்களா? என்ற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. சினிமா வட்டாரமும் இந்த ஒற்றைப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுத் தங்களுக்குள் ரகசியமாகப் பேசத் தொடங்கிவிட்டது.

லண்டன் மர்மம்: இந்தத் தாலிப் பஞ்சாயத்து இந்த அளவுக்குப் பேசுபொருளாக மாற முக்கிய காரணமே, விவிஐபியின் முதல் மனைவி ஏற்கனவே பற்றவைத்த நெருப்பு தான். விவிஐபியின் மனைவி,
நடிகையின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், நல்லா இருந்த குடும்பத்தை பிரிச்சதே அந்த நடிகை தான், என் கணவருக்கும் டாப் நடிகையுடன் இருக்கும் தொடர்புதான் என்றும், என் கணவரை அந்த டாப் நடிகை ஆட்டிப்படைக்கிறார் என அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். இது பெரும் புயலை கிளப்பியது.

Gossip Tamil cinema Gossip

இப்போ தாலி: அந்த விவாகரத்து விவகாரம் இணையத்தில் அடங்குவதற்குள், ஒரு பெரிய தயாரிப்பாளர் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு அந்த விவிஐபி-யும், இந்த நடிகையும் ஒரே காரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த மீடியாவிற்கும் ஷாக் கொடுத்தனர். அதுமட்டுமில்லாமல், இருவருமே ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்திருந்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இப்படி அடுத்தடுத்துப் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்போது நடிகையின் கழுத்தில் கிறிஸ்தவப் பாரம்பரிய தாலியுடன் காட்சியளிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதெல்லாம் இல்ல: இருப்பினும், இந்த விவகாரத்திற்கு விபரம் தெரிந்த சினிமா புள்ளிகள், அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்கப்பா... நடிகை இப்போ நடிச்சிட்டு இருக்குற ஒரு புதிய த்ரில்லர் படத்தோட கேரக்டருக்காகத்தான் அந்த தாலியப் போட்டிருக்காங்க. மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி ரகசியக் கல்யாணம் எல்லாம் ஒன்னும் நடக்கல என்று முட்டுக் கொடுத்து வருகிறார்கள். எது எப்படியோ, படத்தின் கேரக்டரோ அல்லது நிஜ வாழ்க்கையின் ட்விஸ்ட்டோ... அந்த விவிஐபி-க்கும் இந்தச் டாப் நடிகைக்கும் இருக்கும் நெருக்கம் என்னைக்கு முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X