»   »  "தளபதி"யுடன் மீண்டும் மீண்டும் மோதும் "செக்ரட்டரி"!

"தளபதி"யுடன் மீண்டும் மீண்டும் மோதும் "செக்ரட்டரி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் தளபதி நடிகரின் ரசிகர் என்று சொல்லிக் கொண்டாலும் கூட அவரின் படங்களுடன் தன் படங்களை தொடர்ந்து மோத விடுவதில் உறுதியாக இருக்கிறாராம் அந்த செயலாளர்.

செயலாளர் தற்போது கிராமத்துப் பின்னணியிலான ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்தப் படத்தை தளபதி நடிகரின் இரண்டெழுத்துப் படத்துடன் மோதவிட உள்ளாராம்.

ஏற்கனவே தளபதி நடிகரின் படங்களுடன் தனது நதியான படத்தையும், பூஜையான படத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருந்தார். இதில் நதி படம் தேற, பூஜையான படம் தியேட்டரை விட்டு ஓடியது.

Secretary Actor Continuously Clash with Commander Actor

இந்நிலையில் 3 வது முறையாக தனது அடுத்த படத்தையும் நடிகரின் படத்துடன் மோதவிட்டு வேடிக்கை பார்க்கத் தயாராகி வருகிறாராம்.இதனைக் கேள்விப்படுபவர்கள் இவரும் ஒரு தயாரிப்பாளராக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதே போல தளபதி நடிகர் அந்த புலியான படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்கக்காசுகள் வழங்கியபோது(சம்பளப் பணத்தை பாக்கி வைத்தது வேறு விஷயம்) செயலாளரும் அதே போல தனது பாயாத புலியில் பணியாற்றியவர்களுக்கும் வழங்கி இருந்தார்.

மேலும் தளபதி பாணியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செயலாளர் வழங்கியதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இப்படியே போனால் படங்களில் முடியாவிட்டாலும் இந்த மாதிரி விஷயங்களில் செயலாளர், தளபதி இடத்தைப் பிடித்து விடுவார் போல என்று கிண்டல் குரல்கள் கோலிவுட்டில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

English summary
Secretary Actor Continuously Clash with Commander Actor. Sources Said Secretary Actor once Again Clash with Commander Actor His Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil