»   »  'ஓவர் வெளம்பரமா இருக்கே'... செயலாளரைக் கலாய்க்கும் நண்பர்கள்!

'ஓவர் வெளம்பரமா இருக்கே'... செயலாளரைக் கலாய்க்கும் நண்பர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்க நடிகர் தான் செய்யும் அனைத்தையும் விளம்பரப்படுத்துவதால் இவ்ளோ வெளம்பரம் தேவையா? என்று நடிகரின் நண்பர்களே அவரைக் கிண்டல் செய்கின்றனராம்.

படங்களில் நடித்துப் பெற்ற புகழை விட தேர்தல் மூலம் அதிகப் புகழ்பெற்றவர் அந்த செயலாளர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நடிகர் தற்போது தான் செய்த அனைத்தையும் விளம்பரப்படுத்தி வருகிறாராம்.

Secretary Actor Promote his Every Moment

சமீப காலமாக தினசரி ஒரு செய்தியாவது நடிகரைப் பற்றி வந்து விடுகிறதாம். அதிலும் படப்பிடிப்பில் அடிபட்டது தொடங்கி இது செய்தார், அது செய்தார் என்று நடிகரின் ஒவ்வொரு அசைவுமே விளம்பரம் தானாம்.

ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டு கொள்ளாத பலரும் தற்போது வெளிப்படையாகப் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.இதைக் கேள்விப்படும் நண்பர்களும் ஓவர் வெளம்பரமா இருக்கே? என்று நடிகரைக் கலாய்க்கின்றனராம்.

இவரின் விளம்பரங்களால் இதுவரை மனதுக்குள்ளேயே புலம்பிய சக நடிகர்கள், தற்போது வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டதாகக் கேள்வி.

சும்மா ஒரு வெளம்பரம் தான்...

English summary
Sources said Secretary Actor Promote his Every Moment in Medias.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil