»   »  கட்டிடத்தால் கடுப்பான செகரட்டரி நடிகர்

கட்டிடத்தால் கடுப்பான செகரட்டரி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டிடம் முடிஞ்சாதான் கல்யாணம் என்று சொன்ன செகரட்டரி நடிகர் தற்போது கடுப்புடன் காணப்படுகிறாராம்.

சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற செகரட்டரி நடிகர் அடுத்ததாக கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிட்டாராம். செலவு எக்கச்சக்கமாக ஆகுமென்பதால் கிரிக்கெட் விளையாடலாம் என்பது நடிகரின் எண்ணம்.

முன்னணி நடிகர்களை வரவழைத்து எப்படியாவது இந்தக் கிரிக்கெட்டை நடத்தி விடலாம், என்று புத்திசாலித்தனமாக பிளான் போட்டாராம்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் நடிகர் திடீரென்று கடும் வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

என்ன காரணம் என்று விசாரித்தால் எல்லாம் கிரிக்கெட் படுத்தும் பாடு என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதாவது கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப பல சேனல்களில் நடிகர் பேரம் பேசியிருக்கிறார்.

ஆனால் இவர் சொல்லும் விலையைத் தர எந்தச் சேனலும் தயாராக இல்லையாம். அதனால் தான் நடிகர் கடுப்புடன் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

ஒருவேளை கட்டிடம் கட்டி எப்போ கல்யாணம் பண்றதுன்னு? வருத்தப்பட்டிருப்பாரோ?

English summary
Sources Said The Secretary Actor get more Upset Regarding the Building Matter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil