Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. புஜாராவின் தரமான இன்னிங்ஸ்.. வலுவான நிலையில் இந்தியா
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இளம் நடிகையுடன் இரவு பார்ட்டி… வயதாகியும் திருந்தாத நடிகர்!
சென்னை : தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ஒருவர், இளம் நடிகையுடன் இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளது தற்போது கோடம்பாக்கத்தில் பேசு பொருளாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த சீனியர் நடிகருக்கு நடிப்பு என்பது கைவந்த கலை. இந்திய அளவில் பிரபலமான அந்த நடிகருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்து விஷயத்திலும் தமிழ் சினிமாவுக்கே முன்னோடியாக இருக்கிறார் அந்த வயதான நடிகர்.
இதுக்கு மேல வேண்டாம்.. மனைவி போட்ட ஆர்டர்.. நடிகையை நைஸாக கழட்டி விட்டாரா இளம் மாஸ் ஹீரோ?

பிரகாசிக்கவில்லை
சினிமாவில் என்னென்ன வித்தைகள் உள்ளதோ, அதில் தலையை நுழைத்து அக்குவேர்... ஆணிவேராக ஆராய்ச்சி செய்து. அனைத்து புதுமைகளையும் தனது சினிமாவில் புகுத்துவதில் திறமையானவர் என பெயர் எடுத்தவர் அந்த நடிகர். இந்த சீனியர் நடிகருக்கு சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்த அளவுக்கு குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கவில்லை.

தனிமையில் இனிமை
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஒருவருடன் சில ஆண்டுகள் குடித்தனம் நடத்தினார். அந்த வாழ்க்கையும் பாதியில் பிச்சிக்கிட்டு போக தற்போது , அந்த வயதான நடிகர் தனிமையில் இனிமை கண்டு வருகிறார்.

தடபுடலாக நடந்த விழா
இந்த சீனியர் நடிகர் நடித்த திரைப்படம் நீண்ட நாட்கள் கழித்து தற்போது வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் சார்பாக நடந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் நடிக்காதவர்கள் கூட கலந்து கொண்டு அந்த சீனியர் நடிகரை புகழ்ந்து தள்ளி பேசினார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இரவு பார்ட்டி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ஒரு இளம் நடிகைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அந்த வயதான நடிகர். ஏற்கனவே, சீனியர் நடிகருடன் கிசுகிசுவில் சிக்கிய அந்த இளம் நடிகையும், அந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அம்மணியை அழைத்து இரவு பார்ட்டி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக முனுமுனுக்கப்பட்டு வருகிறது.