திருமணத்திற்கு முன் 12 பேருடன் டேட்டிங்.. ஒரே ஆண்டில் விவாகரத்து.. மீண்டும் சீனியர் நடிகை சேட்டை!
சென்னை: சேர்ந்த நடித்த அனைத்து நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அந்த சீனியர் நடிகை. நான் திருமணத்திற்கு முன்பே பல நடிகர்களுடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் என வெளிப்படையாவே பேட்டியில் கூறியிருந்தார். கொஞ்ச நாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த சீனியர் நடிகை மீண்டும் தனது சேட்டையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
பாலிவுட்டில் அழகு தேவதையாக வலம் வந்தவர் தான் ராஜவம்சத்தை சேர்ந்த அந்த சீனியர் நடிகை. இந்தி சினிமாவில், இவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் ரத்தினமான இயக்குநர் ஒருவரின் படத்தில் நடித்தார். அந்த படம் உலகமே கொண்டாடும் அளவிற்கு பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்திற்கு பின் கோலிவுட் சினிமாவின் கனவு நாயகியாக வலம் வந்தார்.

பல நடிகர்களுடன் கிசுகிசு: தமிழில் இவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி படங்களில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். ராஜவம்சத்தை சேர்ந்த நடிகை என்பதால், சினிமாவில் இவருக்கு நல்ல மரியாதையும் இருந்தது. இவர் எந்த நடிகருடன் சேர்ந்து நடித்தாலும் அவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிவிடுவார். ஆனால், இவை எல்லாம் வெறும் வதந்தி என்று சொல்லப்பட்டது. சினிமாவில் பீக்கில் இருந்த போதே, டாப் நடிகர்களுக்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டு முகநூலில் பழகிய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண வாழ்க்கை ஓராண்டுக்குள் முடிந்துவிட, அவரை விட்டு பிரிந்தார்.
காதல் சேட்டை: அதன் பின் சினிமா வாய்ப்பும் குறைந்துவிட, சீனியர் நடிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு, அந்த நோயில் இருந்து குணமாக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றார். பல போராட்டத்திற்கு பின் கடுமையான நோயில் இருந்து மீண்டு வந்தார். சீனியர் நடிகையின் தைரியம் தான் அவரை இந்த நோயுடன் போராடி மீட்டு கொண்டுவந்தது என அனைவரும் அவரை பாராட்டினார்கள். அப்போது சீனியர் நடிகை அளித்த பேட்டியில், நான் திருமணத்திற்கு முன்பே 12 பேருடன் டேட்டிங் சென்று இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். தற்போது, மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருக்கும் சீனியர் நடிகை, மீண்டும் தனது காதல் சேட்டையை ஆரம்பித்து இருக்கிறார். தன்னுடன் வெப் தொடர் ஒன்றில் இணைந்த நடித்த தன்னை விட வயது குறைவான நடிகருடன் ஊர் சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











