பல கோடியை ஆட்டையைப் போட்ட பெரும் புள்ளி.. நடுரோட்டிற்கு வந்த நடிகை.. சுற்றி அடிக்கும் துரோகம்!
சென்னை: அரசியல் பெரும் புள்ளி ஒருவர் செய்த நம்பிக்கை துரோகத்தால் நடிகை ஒருவர் நடுரோட்டிற்கு வந்துள்ளார்.
சீனியர் நடிகையான இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானதே ஒரு பிரபலமான நடிகரின் படத்தில் என்பதால், அடுத்தடுத்து இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவில் இவர் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

கணவரை பிரிந்தார்: அம்சமான அழகு கொண்ட அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு போன வேகத்தில், குழந்தையுடன் கணவரை பிரிந்து வந்தார். அந்த நேரத்தில் சீனியர் நடிகைக்கு உடல்நிலை மோசமானதால், பிரபல நடிகர் ஒருவர் அவருக்கு பக்க பலமாக இருந்து பல உதவிகளை செய்து வந்தார். இந்த விஷயம் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தெரியவந்ததால், அவரது மனைவி ஆளவிடுப்பா சாமி என்று பிரிந்து சென்றுவிட்டார்.
பிரிவுக்கான காரணம்: இந்த விஷயம் பத்திரிக்கையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசுபொருளான போதும், இருவரும் இதுபற்றி கவலைப்படாமல் பல ஆண்டுகள் சேர்த்து வாழ்ந்து வந்தனர். இதனால், சீனியர் நடிகைக்கு வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் படவாய்ப்பு கிடைத்தது. நல்லா வாழ்ந்து வந்த குடும்பத்தில் புயல் அடித்தது போல, தன்னுடைய மகளின் எதிர்காலத்தை நினைத்து இவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தார். பிரிவுக்கான காரணம் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை.
கம்பி நீட்டிய பெரும் புள்ளி: தற்போது, இவர் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்துக்களை எல்லாம் பெரும் புள்ளி ஒருவர் ஆட்டை போட்டு ஏமாற்றி விட்டதாக சோஷியல் மீடியாவில் கதறி அழுது வருகிறார். பிரபல நடிகருடன் ரிலேஷன்ஷிப்பை முறித்துக்கொண்டு தனிமையில் இருந்த இந்த நடிகை அரசியல் பிரமுகருடன் பழகி உள்ளார்.
கொஞ்ச நாட்களில் இருவரும் நெருங்கி பழகியதை அடுத்து, தனது சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணத்தையும் அந்த அரசியல் பிரமுகரிடம்கொடுத்துள்ளார். அந்த பெரும் புள்ளியோ வந்த வரைக்கும் லாபம் என்று அந்த நடிகையின் பணத்தை ஆட்டைப்போட்டு கம்பி நீட்டி உள்ளார். தற்போது அந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் கதறிஅழுதுக்கொண்டு நிற்கிறார்.


Click it and Unblock the Notifications











