முடியாதுன்னா முடியாது தான்: இயக்குனர்களுடன் மல்லுக்கட்டும் இடுப்பழகி

By Siva

சென்னை: இடுப்பழகி நடிகை தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கறாராக ஒரு விஷயத்தை கூறி அடம்பிடிக்கிறாராம்.

கோலிவுட்டில் பல காலமாக ஹீரோயினாக அதுவும் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்தவர் அந்த இடுப்பழகி. போஸ்டரில் அவர் இடுப்பை மட்டுமே மணிக்கணக்கில் பார்த்து ரசித்தவர்கள் உண்டு.

தற்போது அதே இடுப்பு பெருத்துப் போயுள்ளதால் அதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்த இடுப்பழகி தொழில் அதிபராக முயன்று படுதோல்வி அடைந்தார். இதையடுத்து நமக்கு தெரிந்த தொழிலையே செய்வோம் என்று மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அவரின் செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக இல்லை. நடித்தால் ஹீரோயினாகவே நடிப்பேன், கோடிகளில் சம்பளம் வேண்டும் என்று முதலில் முரண்டு பிடித்தார்.

முடியாது

முடியாது

மேடம் உங்களை ஹீரோயினாக போட முடியாது. மூப்பு உங்கள் முகத்தில் தெரிகிறது. கோடிக் கணக்கில் உங்களுக்கு கொட்டிக் கொடுக்க உங்களுக்கு முன்பு போன்று மார்க்கெட்டும் இல்லை என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறியதை கேட்டு நடிகை கோபம் அடைந்தார். பின்னர் நிதானமாக யோசித்தபோது தான் அவர்கள் கூறியது உண்மை என்பது புரிந்து சாந்தமானார்.

அண்ணி

அண்ணி

ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடித்தவர் தற்போது அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அம்மாவாக மட்டும் நடிக்கவே மாட்டேன். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை, நான் இன்னும் யூத் தான் என்று இயக்குனர்களிடம் கூறி அவர்களை அதிர வைக்கிறாராம்.

வாய்ப்பு

வாய்ப்பு

பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பிளாஷ்பேக்கில் மட்டுமே வருகிறாராம் நடிகை. வயதாவது இயற்கை, அதை ஏற்றுக் கொள்ள பயப்பட வேண்டாம் அம்மணி. அதே சமயம் முதல் இன்னிங்ஸில் ஜோடி போட்ட ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர நினைத்தால் அது நடக்காத விஷயம் என்பதை அவர் சீக்கிரம் புரிந்து கொண்டால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X