விதவிதமாய்... மகளை வைத்து கல்லா கட்ட பிளான் போட்ட மூத்த நடிகை.. எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ்

சென்னை: 90 காலத்தில் வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்த அந்த பவ்யமான மூத்த நடிகை, தற்போது தனது இரண்டு மகள்களையும் திரையுலகில் களமிறக்க தீவிர முயற்சியில் இருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

பிரபலமான நடிகை: பவ்யமான அந்த நடிகை பிறந்தது என்னமோ வடமாநிலமாக இருந்தாலும், தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகு பெண்ணாகவே மாறிவிட்டார். கோலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து பெயர் எடுத்தார். இயக்குநர் ஒருவரை காதலித்து குடும்பத்தில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்திய அந்த நடிகை, பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

gossip Tamil cinema

மகளை வைத்துபிளான்: நீண்ட நாட்களாக டிவி, சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அந்த பவ்யமான நடிகை தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் சினிமாவிற்கு வந்ததே தனது மகள்களுக்காகத்தானாம். தனது மகள்களை சிறு வயதிலிருந்தே மீடியா வெளிச்சம் படாமல் வைத்திருந்தார். ஆனால், தற்போது குடும்பத்தின் நிலைமை சரியில்லாததால், மூத்த மகளை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இளைய மகளையும் விரைவில் திரைத்துறையில் அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது.

இது குடும்ப பிராண்ட்டா: சினிமா உலகில் நீண்ட அனுபவம் கொண்ட அந்த நடிகை, தற்போது தனது செல்வாக்கை பயன்படுத்தி மகள்களுக்கு வாய்ப்புகளை தேடி வருவதாகவும், குடும்பத்தின் அடுத்த தலைமுறையை திரைத்துறையில் நிலைநிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் பார்த்த சிலர், மகள்களின் எதிர்காலத்திற்காக அம்மா போராடுகிறார் எனக் கூறினாலும், மற்றொரு தரப்பு இது குடும்ப பிராண்டை தொடர வைக்கும் திட்டம் என கிசுகிசுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X