ஐஸ் வைத்த அரசியல்வாதி.. மகளை அனுப்பிவிட்ட சீனியர் நடிகை.. இப்ப இருந்தே டிரைனிங்கா?
சென்னை: திரையுலகில் வாரிசுகளைக் களமிறக்குவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், அதற்காகப் போடப்படும் கணக்குகளும், பின்னணியில் நடக்கும் காய்நகர்த்தல்களும் தான் பலரையும் புருவம் உயர்த்த வைக்கின்றன. அந்த வகையில், சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்து, தற்போது குணச்சித்திர வேடங்களில் மிரட்டி வரும் அந்த சீனியர் நடிகை, தனது வாரிசைத் திரையில் மின்ன வைக்கப் போடும் புதிய பிளான் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
வாரிசு நடிகை பார்க்க அச்சு அசலாக அம்மாவைப் போலவே லட்சணமாக இருப்பதால், அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் தேடி வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அம்மாவோ வெறும் சினிமா வெளிச்சம் மட்டும் போதாது, பின்னணியில் பெரிய 'பவர்' இருக்க வேண்டும் என்று கணக்கு போட்டாராம். சினிமா வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் திசை மாறலாம் என்பதால், ஆரம்பத்திலேயே ஒரு பெரிய அரசியல் புள்ளியின் ஆதரவைப் பெற நடிகை திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அந்தப் பகுதியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் ஒரு முக்கிய அரசியல்வாதி, நடிகையின் குடும்பத்திற்குச் சில உதவிகளைச் செய்து, நெருக்கமாக பழகி 'ஐஸ்' வைத்து வந்துள்ளார். இதைச் சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட சீனியர் நடிகை, தனது மகளின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, அந்த அரசியல்வாதியின் நிழலில் வளரட்டும் என்று ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

மகளை அனுப்பும் நடிகை: அதாவது, அந்த அரசியல்வாதி நடத்தும் சில முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் விசேஷங்களுக்குத் தன் மகளைத் தனியாக அனுப்பி வைக்கத் தொடங்கியுள்ளார் நடிகை. "இப்ப இருந்தே பெரிய இடத்து பழக்கவழக்கம், அரசியல் நெளிவுசுளிவு எல்லாம் கத்துக்கட்டும்... அப்பதான் சினிமாவுல யாரும் ஆட்டைய கலைக்க முடியாது" என்று நெருக்கமானவர்களிடம் பெருமிதமாகக் கூறி வருகிறாராம்.
ஷாக்கில் திரையுலகம்: இன்னும் சினிமா உலகிலேயே முழுமையாகக் கால் பதிக்காத நிலையில், அதற்குள்ளாகவே அரசியல்வாதியின் பின்னால் மகளை அனுப்பி வைக்கும் அம்மாவின் இந்தச் செயல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. "இப்பவே இப்படியா? இது என்ன புதுவிதமான டிரைனிங்கா?" என்று திரையுலகினர் ரகசியமாகப் பேசி மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். தயாரிப்பாளர்களோ, "படம் ரிலீஸ் ஆகும்போது எந்த அரசியல் பஞ்சாயத்தும் வராமல் இருந்தால் சரி" என்று இப்போதே தலையில் கை வைக்கத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications