தெலுங்கு நடிகை விரித்த வலையில் தானா வந்து விழுந்த சீனியர் ஹீரோயின்
Recommended Video

சென்னை: தேவையில்லாமல் கோபப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சீனியர் நடிகை ஒருவர்.
தெலுங்கு நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். படுக்கையில் நடந்த விஷயங்களை விளக்கி வேறு கூறியுள்ளார்.
தான் மட்டும் அல்ல பல முன்னணி நடிகைகளும் இதை செய்துள்ளனர் என்கிறார்.

படுக்கை
தமிழ், தெலுங்கு திரையுலகில் பெரிய ரவுண்டு வந்துள்ள நடிகையும் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக தெலுங்கு நடிகை தெரிவித்துள்ளார். தன் பட்டியல் போன்றே அந்த நடிகையின் பட்டியலும் பெரிது என்றார். அந்த நடிகை தற்போதும் ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.

பட வாய்ப்பு
சீனியர் ஹீரோயின் மட்டும் அல்ல பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டுள்ள நடிகையும் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த தெலுங்கு நடிகை. சம்பந்தப்பட்ட நடிகைகள் யாரும் வாய் திறக்கவே இல்லை.

கோபம்
சீனியர் ஹீரோயினிடம் தெலுங்கு நடிகை பற்றி கேட்க அவருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்துவிட்டது. தெலுங்கு நடிகை எல்லாம் ஒரு ஆளா என்று கேட்டு கொந்தளித்தார். அந்த கோபத்தால் நடிகை கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.

உண்மை
சீனியருக்கு ஏன் தெலுங்கு நடிகை பெயரை கேட்டாலே கோபம் வருகிறது. ஒரு வேளை தெலுங்கு நடிகை சொன்னது உண்மையாக இருக்குமோ. அதனால் தான் சீனியர் கோபப்படுகிறாரோ என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications









