மார்க்கெட் போயாச்சுன்னு ஒருத்தனும் மதிக்கமாட்டான்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பான கண்ணழகி?
சென்னை: அந்த கண்ணழகி நடிகைக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படியொரு நிலைமையா என கோடம்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. முன்னணி நடிகையாக இருக்கும் வரை தான் அனைத்து விதமான கவனிப்புகளையும் தயாரிப்பு நிறுவனம் தரும் என்றும் மார்க்கெட் தீர்ந்து சீனியர் நடிகையாக மாறிவிட்டால் ஒருதரும் மதிக்கமாட்டார்கள் என்பது கண்ணழகி நடிகை விஷயத்திலும் சரியாக போய்விட்டதாக கூறுகின்றனர்.
நடிகர்களாக இருந்தாலும், நடிகைகளாக இருந்தாலும் அந்த அந்த படங்களில் ஹீரோவாகவும் ஹீரோயினாகவும் நடிக்கும் போது மட்டுமே அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்கின்றனர்.

ஆனால், மற்ற நடிகர்களுக்கு குறிப்பாக சீனியர் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் அப்படிப்பட்ட சலுகைகள் எல்லாம் கிடைக்காது என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. கண்ணழகி நடிகைக்கே சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இப்படியொரு அநியாயம் நடைபெற்றதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அதெல்லாம் அந்த காலம்: ஒரு காலத்தில் நடிகைக்கு கிடைக்காத சலுகைகளே தென்னிந்திய சினிமா உலகில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகை புகழின் உச்சத்தில் இருந்தார். இன்னமும் அவருக்கான கிரேஸ் மக்கள் மத்தியில் இருந்தாலும் படப்பிடிப்பு தளங்களில் அவரது மவுசு மொத்தமாக குறைந்து விட்டது என அதிர்ச்சியை கிளப்புகின்றனர்.
கேரவனே இல்லையா?: மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து வரும் கண்ணழகி நடிகைக்கு புதிய படத்தில் கேரவன் வசதியே செய்து தராத சூழல் உருவானதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். அவரை ரொம்பவே கன்வின்ஸ் செய்து இயக்குநர் இந்த படத்தில் நடிக்க வைத்த நிலையில், தயாரிப்பு தரப்பு நடிகை தனது சொந்த காரிலேயே வந்து செல்ல வேண்டும் என்றும் ஒதுக்கப்பட்ட அறையில் மட்டும் தான் தங்க வேண்டும் என கண்டிஷன் போடப்பட்டது நடிகையை கடுப்பாக்கி விட்டது என்கின்றனர்.
மனக்கஷ்டத்தில் நடிகை: இனிமேல் இதுபோன்ற சிறு படங்களுக்கு தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகை இயக்குநரை அழைத்து சொல்லிவிட்டாராம். இயக்குநருக்காக மட்டுமே இந்த படத்தில் நடிகை நடிக்க ஒப்புக் கொண்டார் என்றும் ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் கூட இந்த சீனியர் நடிகை பெரிதாக மதிப்பதாக தெரியவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











