ஓவரா சவுடால் விட்ட 2 நடிகைகள்: சத்தமில்லாமல் ஆப்பு வைத்த சீனியர்

By Siva

Recommended Video

சத்தமில்லாமல் ஆப்பு வைத்த சீனியர்- வீடியோ

சென்னை: ஓவராக வாய் பேசி வந்த இரண்டு நடிகைகளை சீனியர் நடிகை ஒருவர் புலம்பவிட்டுவிட்டார்.

கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்துள்ளார் அந்த நடிகை. அதனால் அவர் எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாலும் சிரித்தபடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு இளம் நடிகைகள் அவரிடம் போய் மோதியுள்ளனர்.

ஓவர் பேச்சு

ஓவர் பேச்சு

ஒரு நடிகையோ சீனியர் நடிகையின் இடத்தை பிடித்தே தீர்வேன் என்று பிறரிடம் தெரிவித்துள்ளார். சிரித்து சிரித்து படத்தை ஓட்டும் அம்மணிக்கு சீனியர் நடிகையின் இடம் கேட்குதாக்கும் என்று கோலிவுட்டில் சிரித்தார்கள். இது குறித்து தெரிந்தும் சீனியர் நடிகை அமைதியாக இருந்தார்.

சினிமா

சினிமா

வடநாட்டில் இருந்து வந்த நடிகை நடிக்கத் துவங்கிய வேகத்தில் அந்த சீனியர் நடிகையை துரத்திக் காட்டுகிறேன் பார் என்று ஓவராக பேசினார். ஓவர் பேச்சாலேயே தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதுவும் சீனியர் நடிகையின் காதுகளுக்கு சென்றது. அதற்கும் அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

அதிர வைத்துவிட்டார்

அதிர வைத்துவிட்டார்

இரண்டு நடிகைகள் ஓவராக பேசிக் கொண்டிருக்க இந்த சீனியர் நடிகை என்ன ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறாரே என்ற பேச்சு கிளம்பியது. அவர் எதுவும் பேசாமல் காரியத்தில் இறங்கியது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் செய்த காரியத்தால் சவுடால் பேசிய இரண்டு நடிகைகளும் அதிர்ந்து போயுள்ளனர்.

படங்கள்

படங்கள்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்த சீனியர் நடிகை தற்போது ரூட்டை மாற்றி பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் சவால் விட்ட இரண்டு பேருக்கும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் ஆசையில் மண் விழுந்துவிட்டது. சீனியர் நடிகை இறங்கி வந்துள்ளதை பார்த்த பெரிய ஹீரோக்கள் அவரை தங்களின் படங்களுக்கு பரிந்துரை செய்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X