வெளிநாட்டில் கணவர்.. இயக்குநருடன் ரொம்ப நெருக்கம்.. நடிகையின் லீலை எங்க போய் முடியப் போகுதோ?
சென்னை: முன்னாள் ஹீரோயின் நடிகையான அந்த பிரபல நடிகை தற்போது அம்மா நடிகையாகவே மாறிவிட்டார். ஆனாலும், சோஷியல் மீடியாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் ஒருவருடன் அந்த நடிகை படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பயங்கர பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
ஏற்கனவே வேறு ஒரு நபரை காதலித்து வந்த அந்த நடிகை திடீரென வெளிநாட்டில் வேலை செய்யும் நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சேட்டை அதிகம்
கவர்ச்சியாக நடிக்காமல் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் சேட்டை நிறைந்த பெண்ணாக நடித்து 90ஸ் கிட்களை ஏங்க விட்டவர் அந்த நடிகை. சினிமா பிரபலம் ஒருவரை காதலிப்பதாக மனம் விட்டுக் கூறிய அவர் கடைசியில் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.

சினிமாவுக்கு ரெஸ்ட்
திருமணத்துக்கு பிறகு இவருக்கு நடிக்க ஆசை இருந்தாலும், கணவர் குடும்பத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சில காலம் நடிக்காமல் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்திருந்தார். ஆனால், கணவர் அடிக்கடி வெளிநாட்டிலேயே வேலை பார்க்க சென்று விடுவதால் போரடித்துப் போன நிலையில், மீண்டும் நடிக்கட்டுமா என கேட்க அவரும் தாராள மனதுடன் நடிக்க சம்மதித்துள்ளார்.

மீண்டும் நடிப்பு
மீண்டும் நடிக்க வந்த அந்த முன்னாள் ஹீரோயினுக்கு அம்மா, பெரியம்மா, சித்தி, அக்கா போன்ற ஓல்டு ஏஜ் ஹோம் கேரக்டர்களே கிடைத்து வருகின்றன. ஆனால், அம்மணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதினெட்டு வயசு பொண்ணே தோற்றுப் போகும் அளவுக்கு படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருவதை பார்த்து எங்கேயோ இடிக்குதே என நினைத்த ரசிகர்களுக்கு தற்போது மேலும், ஷாக்கிங் ஆன தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இயக்குநருடன் நெருக்கம்
மார்க்கெட் இழந்து வெகு காலம் ஆன பின்னர், நல்ல ரோல் கிடைக்காமல் தவித்து வந்த நடிகையின் தீவிர ரசிகரான அந்த இயக்குநர் நடிகையை கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் ஹீரோயினாக புக் செய்ததும் நடிகைக்கு அவர் மீது பெரும் ஈர்ப்பு வந்து விட்டதாக கூறுகின்றனர். மேலும், சமீபத்தில் இயக்குநரை அப்படி கட்டிப்பிடித்த படி அவர் கொடுத்த போஸை பார்த்து சமஸ்தானமே ஆடிப் போய்விட்டதாம்.

எங்கே போய் முடியப்போகுதோ
இயக்குநருடன் தொடர்ந்து தனியாக பார்ட்டிகளுக்கு செல்வது, அவருடன் ஊர் சுற்றுவது என தனிப்பட்ட முறையில் நடிகை காட்டி வரும் நெருக்கம் தான் தற்போது ஏகப்பட்ட யூகங்கள் கிளம்ப காரணமாக அமைந்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரை கழட்டி விட்டுவிட்டு இந்த இயக்குநருடன் செட்டில் ஆக திட்டம் போட்டு வருகிறாரா என சினிமா வட்டாரங்கள் அவர் காது படவே பேசினாலும், அதைபற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்து வருகிறார் அந்த சீனியர் நடிகை.


Click it and Unblock the Notifications