ருசி கண்ட பூனையான இயக்குநர்.. ஷூட் முடிந்த பிறகும் நடிகைக்கு மட்டும் தனி பேட்ச் வொர்க் நடக்குதாம்!
சென்னை: அந்த பிரபல நடிகரின் படம் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்து வந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிவடைந்து விட்டது. ஆனால், இன்னமும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், விரைவில் படத்தை எடுத்து வெளியிடும் முடிவுக்கு வந்து விட்ட இயக்குநர் மறுபடியும் பேட்ச் வொர்க் நடத்தியிருக்கிறார்.

முந்தைய ஷூட்டிங்கில் இயக்குநரிடம் சிக்காத நடிகையை தற்போது தனியாக அழைத்துச் சென்று படாத பாடு படுத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ரொமான்டிக் இயக்குநர்: காதலுக்கு வயசாகாது என்கிற பாலிசியுடன் வலம் வரும் அந்த ரொமான்டிக் இயக்குநர் ஹைடெக்காக படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை இழந்து நடு ரோட்டுக்கே வந்து விட்டார்.
அதன் பின்னர் என்ன செய்வது என்றே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்த அந்த இயக்குநர் சமீப காலமாக முழு நேர நடிகராகவே மாறிவிட்டார்.
சிக்காத நடிகை: இந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அந்த மலையாள நடிகை ஆரம்பத்தில் இருந்தே சரியாக மற்ற நடிகர்களுடன் இணைந்தே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதும், ஷூட் முடிந்ததும் மொத்தமாக கும்பலோடு கும்பலாகவே கிளம்பி செல்வதுமாக பிசியாக இருந்து இயக்குநரிடம் இருந்து தப்பித்து வந்திருக்கிறார்.

நடிகை தன்னிடம் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார் என்பதை அறிந்து கொண்ட இயக்குநர், அவசரப்படாமல் சரியான நேரத்தை எதிர்பார்த்து கொக்குப் போல காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது நடிகை அந்த இயக்குநர் வலையில் வசமாக வந்து சிக்கிக் கொண்டதாம்.
தனியாக பேட்ச் வொர்க்: மீண்டும் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று அறிவித்த இயக்குநர் ஹீரோவின் போர்ஷனை முடித்து விட்ட நிலையில், தற்போது அந்த நடிகையை வைத்து சில பேட்ச் வொர்க் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்.
முதலில் நடிகை தனியாக வரத் தயங்கிய நிலையில், நடிகர் கொடுத்த அழுத்தம் காரணமாக சம்மதம் தெரிவித்து இருக்கிறார். எப்படியும் குறைந்த பட்சம் ஆட்களாவது இருப்பார்களே என நம்பி ஷூட்டிங்கிற்கு சென்று பார்த்தால், இயக்குநர் மட்டும் தனியாக ரிஹர்சல் பார்க்க வேண்டும் என நடிகையை படாத பாடு படுத்தி விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











