அதை அவர் எப்படிச் சொல்லலாம்? அந்த உசர ஹீரோவுக்கு எதிரா அதிரடியா களமிறங்குதாமே இயக்குனர்கள் டீம்!

By

சென்னை: அந்த டிடெக்டிவ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட இயக்குனருக்கு ஆதரவாக, ஒரு டீம் களத்தில் இறங்கி இருக்கிறது என்கிறார்கள்.

உசர ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை இயக்கினார் அந்த இயக்கம். அதற்கு வரவேற்பு கிடைத்தது.

அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வந்தார். இதன் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து வந்தது.

நேரடி மோதல்

நேரடி மோதல்

சரியாகத் திட்டமிடாததால் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் சில கோடிகள் செலவாக, தயாரிப்பாளரான அந்த ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் முட்டிக் கொண்டது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் வெடித்துவிடும் நிலையிலேயே இருவருக்குமான மோதல் இருந்ததாம். பிறகு இன்னொரு நாளும் ஷூட்டிங் கேன்சலாக இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் நேரடியாகவே மோதல் ஆரம்பமாகிவிட்டது.

பட்ஜெட்

பட்ஜெட்

கடந்த டிசம்பரில் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையே இயக்குனர் இயக்கிய சைக்கோத்தனமான படம் ஓடிவிட, தனது சம்பளத்தை அதிகப்படுத்திக் கேட்டாராம் இயக்குனர். பிறகு பட்ஜெட்டையும் அதிகப்படுத்தினாராம். ஏற்கனவே சில கோடிகள் நஷ்டமான நிலையில், மெகா பட்ஜெட்டுக்கு ஹீரோ உடன்படவில்லை. இந்நிலையில்தான் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனர் அறிவித்தார்.

கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

இந்நிலையில் அந்த இயக்குனர், தயாரிப்பாளரான ஹீரோவுக்கு போட்ட கண்டிஷன்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாயின. பின்னர் அந்த ஹீரோ, தானே படத்தை இயக்குவதாக அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில், யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, மற்ற தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவசரக் கூட்டம்

அவசரக் கூட்டம்

இந்நிலையில், அந்த இயக்குனருக்கு ஆதரவாக, திடீரென்று ஒரு டீம் ஃபார்ம் ஆகி இருக்கிறதாம். இமய இயக்குனர் தலைமையில் களமிறங்கி இருக்க்கும் அந்த டீமில், கட்சி நடத்தும் அந்த இயக்குனரும் இருக்கிறாராம். கூடவே தொழிலாளர் சங்கத்தில் இருக்கும் இயக்குனரும் இன்னும் சில மூத்த இயக்குனர்களும் சேர்ந்துகொள்ள, அவசர கூட்டம் நடக்கிறதாம், அதிரடியாக.

கண்டன அறிக்கை

கண்டன அறிக்கை

'ஒரு டைரக்டரை எப்படி கேவலப்படுத்த முடியுமோ, அப்படி பண்ணியிருக்காரு, அந்த ஹீரோ, அவரை சும்மா விடக்கூடாது' என்று சொல்கிறார்களாம் சிலர். 'அந்த இயக்குனரே படத்தில் இருந்து விலகிக்கிறேன்'னு கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்காரு, இதுல நாம என்னத்த போய் பேச? என்று சிலரும் சொல்லி வருகிறார்களாம். ஏதாவது கண்டன அறிக்கை வரலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X