கத்தரி போடும் மாஸ்' நடிகர்.. கண்ணீரில் 'டார்க்' இயக்குனர்.. கோலிவுட்டில் வெடித்த புது பஞ்சாயத்து!
சென்னை: கோலிவுட்டின் அந்த 'டார்க் காமெடி' ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருக்கு இப்போது பெரிய தலைவலி வந்திருக்கிறது. எடுத்த ஒரு சில படங்களிலேயே சினிமா உலகையே தன் பக்கம் திரும்ப வைத்தார். அவரிடம் கதை கேட்டு இம்ப்ரஸ் ஆன நம்ம ஊரு சீனியர் 'மாஸ்' நடிகர், உடனே "நாம படம் பண்றோம்" என க்ரீன் சிக்னல் கொடுத்தார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த இயக்குனர், இதுவரை யாரும் பார்க்காத ஒரு டார்க் காமெடி த்ரில்லர் பண்ணலாம் என வெறித்தனமாக இரவு பகலாக ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்திருக்கிறார். ஆனால், அங்கேதான் ட்விஸ்ட்டே காத்திருந்தது.
முழுக் கதையையும் பவுண்டட் ஸ்கிரிப்டாக இயக்குனர் கொண்டு போய் நீட்டியபோது, அதை முழுமையாகக் கேட்ட அந்த சீனியர் நடிகர், கதையின் போக்கையே மாற்றும் சில கண்டிஷன்களைப் போட்டு இயக்குனரை அதிர வைத்துள்ளாராம். எல்லாம் ஓகே... ஆனா, இந்த சீன்ல என் இமேஜ் டேமேஜ் ஆகுற மாதிரி இருக்கு, அதை மாத்துங்க... இந்த இடத்துல நாலு ஃபைட் சீன் வைங்க... அப்புறம் வில்லனை நான் ஓங்கி அடிச்சா பறக்குற மாதிரி மாத்துங்க என தன் பாணிக்கு கதையை கம்ப்ளீட்டாக மாத்தச் சொல்லி, தன் வழக்கமான கமர்ஷியல் 'மாஸ் மசாலா' பார்முலாவை நுழைக்கச் சொல்லி கத்தரி போட ஆரம்பித்துவிட்டாராம் அந்த சீனியர் நடிகர்.

மாஸ் நடிகர்: அவர் சொல்ற மாஸ் மசாலாவையெல்லாம் படத்தில் சேர்த்தா, இது எப்படி சார் டார்க் காமெடி படமாகும்? என் ஸ்டைல் மொத்தமும் காலி... படம் ரிலீஸான அப்புறம் என்னைத்தான் நெட்டிசன்கள் வச்சு செய்வாங்க என இயக்குனர் தன் உதவி இயக்குனர்களிடம் தலையிலடித்துப் புலம்பி வருகிறாராம். இருப்பினும், பெரிய நடிகருடன் படம் இயக்கும் வாய்ப்பை இழக்க விரும்பாத இயக்குனர் ஒருபுறம் சமரசம் செய்யலாமா என்று யோசித்து வருகிறாராம். மறுபுறம், தனது ஸ்டைலை எப்படி விட்டுக் கொடுக்க முடியாது என்ற எண்ணமும் அவரை தடுக்கிறதாம். இதனால் இந்த கூட்டணி தொடருமா? இயக்குனர் நடிகரின் கோரிக்கைகளுக்கு இணங்குவாரா? அல்லது வணக்கம் சார், நான் கிளம்புறேன் என கும்பிடு போட்டு நகர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications