»   »  இனிமே எலக்‌ஷன், பாலிடிக்ஸ் வேண்டாம்... அப்பாவை கண்டித்த மகன்கள்!

இனிமே எலக்‌ஷன், பாலிடிக்ஸ் வேண்டாம்... அப்பாவை கண்டித்த மகன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனிமே எலக்‌ஷன், பாலிடிக்ஸ் வேண்டாம்...அப்பாவை கண்டித்த மகன்கள்!- வீடியோ

சென்னை: இடைதேர்தலில் மீண்டும் போட்டியிட ஆசைப்பட்ட அப்பாவுக்கு மகன்கள் அட்வைஸ் செய்து மனதை மாற்றிவிட்டார்களாம்.

நதியை பெயராக வைத்திருக்கும் இசையமைப்பாளர் கடந்த முறை இடைத்தேர்தலில் காவிக் கட்சி சார்பில் போட்டியிட்டார். பாட்டெல்லாம் பாடி ஓட்டு கேட்டார். ஆனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது மீண்டும் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் இவருக்கே வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் மகன்கள் இருவரும் 'முன்னாடிக்கு இப்ப அந்த கட்சிக்கு பயங்கர கெட்ட பேர் ஏற்பட்டிருக்கு. அதனால நின்னோம்னா ஜெயிக்கவும் முடியாது. கெட்ட பேர் தான் மிஞ்சும். அதனால கொஞ்ச நாளைக்கு தீவிர அரசியல் வேண்டாம்' என்று அட்வைஸ் செய்தார்களாம்.

ஆமா... செலவு மிச்சம் என்று தந்தையும் சரி சொல்லிவிட்டாராம். ஆனால் கட்சியில் இருந்து பேமெண்ட் வாங்கிக்குங்க... நில்லுங்க என்று ஆஃபர் கொடுத்து வருகிறார்கள்.

அந்த அளவுக்கு ஆள் பற்றாக்குறை?

English summary
That senior musician has decided to avoid the upcoming by election after his sons advise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil