ரீல் ஜோடிக்காக ரியல் மனைவியைப் பிரியும் பிரபல சீரியல் நடிகர்.. நடிகையும் அதே கதைதான்!

பிரபல சீரியல் ஜோடி ஒன்று விரைவில் ரியல் ஜோடியாகப் போகிறார்களாம்.

சென்னை: பிரபல சீரியல் ஒன்றில் இணைந்து நடித்து வரும் ஜோடி ஒன்று விரைவில் ரியல் ஜோடியாகப் போகிறார்களாம். இதில் என்ன பெரிய விசயம் என்கிறீர்களா? இருக்கிறது.

சம்பந்தப்பட்ட ரீல் ஜோடி ஏற்கனவே தனித்தனியே திருமணம் ஆனவர்கள். சீரியலில் நடித்த போது கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதால், தங்களது துணையைப் பிரிந்து நிஜத்திலும் ஜோடி சேர திட்டமிட்டுள்ளார்களாம்.

இதில் மிகப் பெரிய காமெடி என்னவென்றால், சம்பந்தப்பட்ட சீரியல் நடிகருக்கு முதல் திருமணமும் காதல் திருமணம் தான். அவரும் ஒரு சீரியல் நடிகை தான். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தையும் கூட உள்ளது. மற்றவர்கள் கண் வைக்கும் அளவிற்கு அழகான குடும்பத்தில் இப்போது விரிசல் ஏற்பட்டு விட்டது.

நடிகையின் முடிவு:

நடிகையின் முடிவு:

சீரியல் நடிகரை மறுமணம் செய்து கொள்ள விரும்பும் நடிகையும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். அவர்களுடையதும் காதல் திருமணம் தான். ஆனால் அவர் நடிகரில்லை. எனவே கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிய அந்த நடிகை முடிவு செய்துள்ளாராம்.

திட்டம்:

திட்டம்:

ஆரம்பத்தில் அந்த சீரியலில் வேறொரு நடிகை தான் நாயகியாக நடித்தார். ஆனால் சிலப்பல காரணங்களால் அவர் வெளியேறி விடவே, இந்த நடிகை உள்ளே வந்தார். சீரியலில் இந்த ஜோடியின் கெமிஸ்டரி நன்றாகவே பேசப்பட்டது. அதனாலேயே இருவரும் முறைப்படி தங்கள் துணையைப் பிரிந்து மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம்.

டிஆர்பி:

டிஆர்பி:

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல, சேனலையும் சேர்த்தே திட்டுகின்றனர். சீரியலையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நடிகர்கள் பங்கேற்கும் மற்ற நிகழ்ச்சிகளிலும் நாயகன், நாயகியை ரியல் ஜோடி போல் காட்டி தங்கள் டிஆர்பியை ஏற்ற அதிகமாகவே மெனக்கெடுகிறது அந்த சேனல்.

தவறான எண்ணம்:

தவறான எண்ணம்:

இதுவே சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு தொக்காகி, நாம் தான் நல்ல ஜோடி என்ற நினைப்பு வந்து விடுகிறது என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள். அதனாலேயே நடிப்பை நிஜமென்று நம்பி, அவசர அவசரமாக தங்களது திருமணப் பந்தத்தை முறித்துக் கொள்கிறார்கள். ஆனால் இத்தகைய உறவுகள் நீண்ட காலம் நீடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X