ஓவரா சீன் போட்ட சின்னத்திரை நடிகை.. இப்போ ஒப்பாரி வைக்க காரணமே புருஷன் தானாம்!
சென்னை: சின்னத்திரை நடிகையாக வலம் வரும் அந்த சீன் போடும் நடிகை சமீபத்தில் காதல் என்றும் கணவர் என்றும் ஓவராக சீன் போட்டு வந்த நிலையில், எல்லாமே கணவரின் காசுக்காகத்தான் என்பது தெரியவந்து பேரதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர்.
பேராசை பிடித்த அந்த சின்னத்திரை நடிகை பணக்கார பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ள காரணமே அவரிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டுத் தானாம்.

ஆனால், அந்த பணக்கார பிரபலமே ஒரு பெரிய மோசடி மன்னன் என்பது தெரிய வந்த நிலையில், தன் வாழ்க்கையே வீணாப் போயிடுச்சே என சின்னத்திரை நடிகை தற்போது ஒப்பாரி வைத்து வருகிறார் என பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ள தகவல் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது.
காதல் ஜோடிகள்: காதல் காரணமாகத்தான் அந்த பணக்கார பிரபலத்தை காதலித்தேன் என சின்னத்திரை நடிகை சிரிப்பு வராமல் பேசுவதை கேட்டும் பலரும் சிரிக்க ஆரம்பித்து ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது காதல் ஜோடிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்த பிரபலம் பொசுக்குன்னு போட்டு உடைத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
மோசடி மன்னன்: சினிமாவில் பெரிய ஆள் என தன்னைக் காட்டிக் கொண்டு பல இடங்களில் கையாடல் செய்து கோடிக் கணக்கில் பேங்க் பேலன்ஸை ஏற்றி வைத்துக் கொண்டு சின்னத்திரை நடிகையை சரியான நேரத்தில் தொக்காக தூக்கி விட்டார் என்றும் தற்போது அவர் மோசடி மன்னன் என்பதை அறிந்து கொண்ட நடிகை ஆத்திரத்தில் கத்தி புலம்பி வருகிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஒப்பாரி வைக்கும் நடிகை: உருகி உருகி காதலித்தேனே கடைசியில், இப்படி என்னையே ஏமாற்றி விட்டாரே என்றும் அவர் பண்ணிய ஃபிராடுகள் பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என நடிகை ஒப்பாரி வைத்து வருவதாக நெருங்கிய தோழியும் பிரபல நடிகையுமான ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவிழ்த்து விட்ட பேச்சு தற்போது கோடம்பாக்கத்தில் பெரிய பிரளயத்தையே உருவாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











