கார் டிரைவருடன் கசமுசா.. சீரியல் நடிகை பண்ண சில்றத்தனம்.. காதலருக்கு தெரிஞ்சு பிரேக்கப்பே ஆகிடுச்சு?
சென்னை: உருகி உருகி காதலரை காதலித்து வருகிறேன் என சோஷியல் மீடியாவில் அடிக்கடி வீடியோக்களையும் காதலருடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களையே பொறாமைப்பட வைத்து வந்த அந்த பப்ளியான சின்னத்திரை நடிகை சமீபத்தில் தனது காதலரை பிரேக்கப் செய்து விட்டாராம். ஆனால், அதற்கான காரணம் தான் தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
காதலர் தினத்துக்கு புதிதாக காதலர்கள் காதலை சொல்லி ஒன்றாக சேர்வார்கள். ஆனால், இங்கே எல்லாமே ரிவர்ஸில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அந்த பப்ளியான சீரியல் நடிகையை இந்த ஆண்டு காதலர் தினத்தன்று அவரது காதலர் திடீரென இதெல்லாம் செட்டாகாது பிரேக்கப் செய்து விடலாம் என சொல்லியதும் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஓகே அப்புறம் உன் இஷ்டம் என்று மட்டும் சொல்லி விட்டு அந்த நடிகை சென்று விட்டாராம்.

புலம்பிய காதலர்: அந்த நடிகை பற்றிய பலான விஷயம் தெரிந்ததும் கன்னத்திலேயே பளார் பளார் என அறை விட்டு பயங்கரமாக அவரை அசிங்கப்படுத்தி விட்டு வரலாம் என்று தான் சென்றிருக்கிறார் அந்த காதலர். ஆனால், இத்தனை நாளாக உயிருக்கு உயிராக காதலித்தும் நம்மை விட்டு விட்டு இன்னொரு நபருடன் நெருக்கமாக அவர் இருந்தது அறிந்தும் ஷாக்கான காதலர் அவருடைய வாழ்க்கையில் நமக்கு இனி இடமில்லை. நாம் அமைதியாக ஒதுங்கி விடுவதே நல்லது என நினைத்து பிரிந்து விட்டாராம். ஆனால், அந்த வலி தாங்க முடியாமல் நண்பர்களுடன் பப் ஒன்றில் குடித்து விட்டு இந்த விஷயங்களை கொட்டித் தீர்த்து விட்ட நிலையில், தற்போது அது சீரியல் வட்டாரத்தில் பரவி வருவதாக கூறுகின்றனர்.
கார் டிரைவருடன் கசமுசா: தினமும் எத்தனை மணி நேரம் சூட்டிங் நடந்தாலும் 2 மணி மூன்று மணி என அதிகாலை நேரத்திலும் அந்த நடிகையை இளம் கார் டிரைவர் ஒருவர் தான் காத்திருந்து பிக்கப் செய்து வருவார். வயதான நபரை கார் டிரைவராக வைக்க வேண்டியது தானே என ஏற்கனவே காதலியிடம் காதலர் கேட்டதற்கு வயதானவர்கள் 12 மணிக்கு மேல தூங்கி விடுகின்றனர். இவன் ரொம்ப சின்ன பையன் என்ன சேஃப்பா கூட்டிட்டுப் போறான் என சொன்னதும் சின்னப் பையன் தம்பி மாதிரின்னு நினைச்சிட்டு அந்த காதலரும் எதுவும் சொல்லவில்லையாம். ஆனால், சமீபத்தில், கார் டிரைவருடன் அந்த சீரியல் நடிகை மோசமாக நடந்துக் கொள்கிறார் என்பதை நெருங்கிய தோழி ஒருவர் சில ஆதாரங்களுடன் போட்டுக் கொடுத்த நிலையில் தான் தனது காதலியை பிரேக் அப் செய்து விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











