கணவருக்கு தெரியாமல் மனைவி பார்த்த வேலை.. கண்டுபிடித்த மகன்.. வீட்டில் ஒரே பிரச்னையாம்?
சென்னை: பிரபல டிவி நடிகை ஒருவர் கணவருக்குத் தெரியாமல் பார்த்த வேலையை மகன் கண்டுபிடித்து அப்பாவிடம் மாட்டிவிட குடும்பத்தில் பிரச்னை வெடித்துள்ளதாக கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் சுடச் சுட பரவி வருகிறது. சின்னத்திரை நடிகைகள் பொதுவாகவே சீரியல்களில் நடிப்பது தான் சேஃப்டி என்றும் அதிகளவில் அட்ஜெஸ்ட்மென்ட் உள்ளிட்ட எந்தவொரு தொல்லையும் இருக்காது என்பதாலும், கிளாமராக உடை அணியத் தேவை இருக்காது என்பதற்காகவும் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதையே விரும்பி வருகின்றனர்.
சமீப காலமாக பெண்களுக்கு எல்லா துறையிலும் மிகுந்த பாதுகாப்பு கிடைத்து வருகிறது. முன்பை போல வாயை மூடிக் கொண்டிருக்காமல், நடிகைகள் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தைரியமாக வெளியே சொல்லவும், தவறாக நடக்க முயன்றால், அந்த பிரபலங்களை அம்பலப்படுத்தவும் ரெடியாக உள்ளனர்.

விருப்பப்பட்டும், வேறு வழியில்லாமல், ஷார்ட் கட்டில் பட வாய்ப்புகளை பெற்றுவிட நினைக்கும் ஒரு சிலர் மட்டுமே தவறான பாதையில் சிக்கிக் கொள்வதாக கூறுகின்றனர்.
பிரபல சீரியல் நடிகை: சினிமாவில் நடிக்க பலமுறை அந்த நடிகைக்கு வாய்ப்பு வந்தும் குடும்பத்தினர் ஒத்துழைப்பு பெரிதாக இல்லாத நிலையில், அதையெல்லாம் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். சின்னத்திரையிலேயே தனக்குத் தேவையான புகழும் சம்பளமும் கிடைப்பதால் நடிகை இங்கேயே பல காலத்தை கடந்து விட்டார். ஆனால், தற்போது திடீரென அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எட்டிப் பார்க்கவே பிரச்னை வெடித்துள்ளதாக கூறுகின்றனர்.
கணவருக்குத் தெரியாமல்: தொழில் விஷயத்தில் தனது மனைவி எல்லை மீறி செல்ல மாட்டார் என்பதால், அவருடைய கணவரும் பெரிதாக எதை பற்றியும் கண்டுக் கொள்ளாமல் நடிகைக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்தது போல சீன் போட்டு வந்தார். ஆனால், திடீரென ஒரு பெரிய நடிகர் படத்தில் நடிக்க சினிமா சான்ஸ் வந்ததும் நடிகையால் நோ சொல்ல முடியாத நிலையில், கணவருக்குத் தெரியாமல் நடித்து விட்டு வந்துவிடலாம் என நடிகை ஒரு சிறிய ரோல் தானே என ஓகே சொல்லிவிட்டாராம்.
மாட்டிவிட்ட மகன்: அம்மா சீரியலை தாண்டி சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ஷூட்டிங்கிற்கு சென்ற விஷயம் மகனுக்குத் தெரிய வர அப்பாவிடம் மாட்டிவிட்டாராம். இதனால், வீட்டில் பிரச்னை வெடிக்க, எல்லாம் எனக்குத் தெரியும் என்றும் நல்ல ரோல் என்பதால் தான் நடிக்கப் போனேன், சினிமாவில் நடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை நான் தான் முடிவு செய்வேன், என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் கன்ட்ரோல் பண்ணக் கூடாது என்றும் திட்டவட்டமாக சொல்லி விட்டாராம். இதனால், நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











