வாய்ப்புக்காக நடிகர்களுடன் நெருங்கி பழகும் சீரியல் நடிகை.. கல்யாணமாகதவர் போல் காட்டிக்கொள்கிறாராம்!
சென்னை: பட வாய்ப்புக்காக சீரியல் நடிகை ஒருவர் இளம் நடிகர்களுடன் நெருங்கி பழகி வருவதுதான் இப்போதைக்கு கோலிவுட்டில் ஒரே பேச்சாக உள்ளது.
பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானவர் அந்த நடிகை. சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு அத்தனை ஃபேன் ஃபாலோயர்கள் இருந்தனர்.
சீரியலுக்கு கொஞ்சமும் மேட்சாகாத கலகலப்பான முகம். அழுகை காட்சிக்கு கொஞ்சம் செட்டாகாதவராக இருந்தார் அந்த நடிகை.

நடிக்க வாய்ப்பு
அப்போதே அவரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இவர் பெரிய திரையில் பெரிய இடத்தை பிடிப்பார். நிச்சயம் சினமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றனர். அதை போலவே தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அம்மணிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகை ஆகிவிட்டார்.

நடிகருடன் நெருக்கம்
அண்மையில் அம்மணி நடித்த முதல் படம் ரிலீஸானது. அந்தப் படம் நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றது. அதற்கு முன்னதாகவே நடிகை இளம் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகுவதாக பேச்சு எழுந்தது. சமூக வலைதளங்களில் இருவரும் மாறி மாறி புகழ்ந்து கொண்டதும் பெரும் சர்ச்சையானது.

அரைகுறை ஆடை
அதோடு சீரியலில் நடித்த வரை அடக்கம் ஒடுக்கமாக இருந்த நடிகை சினிமாவுக்கு போன பிறகு அரை குறை ஆடையில் வலம் வர தொடங்கியிருக்கிறார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சினிமா வாய்ப்புக்காக வேண்டி நடிகை இளம் நடிகர்களுடன் ரொம்பவே நெருக்கம் காட்டி வருகிறார் என்று பேச்சு எழுந்துள்ளது.

ஒரு குழந்தை இருப்பதை
அதோடு தனக்கு திருமணம் ஆன விஷயத்தையும் நடிகை மறைத்து வருகிறாராம். திருமணம் ஆன விஷயம் வெளியே தெரிந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று திட்டம்போட்டு திருமணம் ஆனதை மறைத்து வருகிறாராம் நடிகை. அதுமட்டுமா தனக்கு ஒரு குழந்தை இருப்பதை நடிகை மறைத்து வருகிறாராம்.

வெவரம்தான் போங்க..
இதனை அறிந்த ரசிகர்களும் கோலிவுட்காரர்களும் சினிமா வாய்ப்புக்காக இப்படி கூடவா செய்வார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்களாம். ஆனால் நடிகையிடம் நம்பி பழகியவர்கள், இவருக்கு குழந்தை இருக்கிறதா என அதிர்ச்சி அடைந்து வருகிறார்களாம். பரவாயில்ல சீரியல்லேருந்து வந்தாலும் நடிகை வெவரமாதான் இருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











