சின்னத்திரை நடிகையின் சில்மிஷ ஆட்டம்.. பல பட வாய்ப்புகள் இப்படித்தான் கிடைக்குதா?.. அசிங்கமா போச்சு!
சென்னை: ரியாலிட்டி ஷோவுக்கு பிறகு அந்த சின்னத்திரை நடிகைக்கு திடீரென பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்க காரணமே எந்தளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி நடிக்கலாம் என்கிற முடிவுக்கு நடிகை வந்தது தான் என பகீர் கிளப்புகின்றனர்.
சீரியலில் ஹோம்லி லுக்கில் நடித்து பலரது அன்பை பெற்று வந்தவர் தான் அந்த கண்ணழகி நடிகை. தனது காதல் கணவருடன் ஏற்பட்ட பஞ்சாயத்துக் காரணமாக அவரை பிரிந்த நிலையில் தான் அந்த ரியாலிட்டி ஷோவுக்குள் நுழைந்தார்.

நடிகைக்கு புதிதாக கிடைத்த நட்பு வட்டம் காரணமாக அவரது நடவடிக்கைகள் மொத்தமாக மாறிவிட்டது என்றும் இதற்கு மேல் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக்கு நடிகை ஆபாச ரூட்டுக்கே சென்று விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
கணவரின் கள்ளக்காதல்: சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்த அந்த நடிகை சீரியல் நடிகர் ஒருவரையே காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். கிளி போல மனைவி இருந்தாலும் குரங்கு போன்ற சின்ன வீடுக்கு ஆசைப்பட்ட கணவரின் திருட்டுத்தனத்தை கண்டறிந்த சீரியல் நடிகை இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது என்கிற முடிவுக்கு வந்து அவரை விட்டு பிரிந்து விட்டார்.
கூடா நட்பு: திருமண வாழ்க்கை சரியாக அமையாத விரக்தியில் நடிகை குடிபோதைக்கும் கூடா நட்புடன் சேர்ந்து மற்ற தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டார் என்று பேச்சுக்கள் புகையத் தொடங்கின. மேலும், ரியாலிட்டி ஷோ மூலம் நிறைய வருமானம் மற்றும் பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அனைத்து இடத்திலும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு அனைத்து விதமான கண்டிஷன்களுக்கும் ஓகே சொல்லி நடிகை சின்னத்திரையில் இருந்து ஜம்ப் ஆகி வெள்ளித்திரையில் பிஸியாகி விட்டார் என்கின்றனர்.
ஆபாச படங்கள்: சின்னத்திரையில் குடும்பப்பாங்கான நடிகையான வலம் வந்த அவர், தற்போது பணத்துக்காக ஆபாச படங்களிலும் ஆபாச காட்சிகளிலும் இறங்கி நடித்து வருகிறார் என்கின்றனர். சின்னத்திரை நடிகையின் இந்த சில்மிஷ ஆட்டத்தை பார்த்து தான் தற்போது கோடம்பாக்கமே கதி கலங்கி போயுள்ளதாக கூறுகின்றனர். இனிமேல், நடிகைக்கு தொடர்ந்து இதே போன்ற பல ஆஃபர்கள் வரிசை கட்டும் என்றும் பணம் கிடைத்தாலும் நடிகை இத்தனை ஆண்டுகள் சம்பாதித்து வைத்த நல்ல பெயர் போய்விடும் என்றும் கிசுகிசுக்கத் தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications