பாவம்ப்பா அந்த சீரியல் நடிகை.. பிட்டு பட ஹீரோயினாவே மாத்திடுவாங்க போல.. குவியும் தயாரிப்பாளர்கள்?
சென்னை: மங்களகரமான அந்த நடிகை சீரியலில் அப்படி ஹோம்லியாக நடித்துவிட்டு சினிமாவில் இப்படி சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு மாறிவிட்டாரே என கோடம்பாக்கமே கதிகலங்கி போயிருக்க நடிகைக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தர்ம சங்கடத்தில் தவித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சினிமாவில் ஒருவர் போலீஸ் வேஷம் போட்டுவிட்டால் அவரை தொடர்ந்து பல படங்களில் அப்படியே நடிக்க வைத்துவிடுவார்கள். பலாத்கார காட்சியில் நடித்தவர்களை அப்படியே நடிக்க வைப்பதும் அவர்கள் அப்படி நடிக்க மறுப்பதையும் கேள்விப்பட்டிருப்போம்.

அதே போன்றதொரு சூழலில் தற்போது அந்த மங்களகரமான நடிகை மாட்டிக்கொண்டு தவித்து வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
ச்சீ.. ச்சீ.. ச்சீ.. குமாரி நீயொரு ச்சீ: பணத்துக்காக இப்படியா ஆபாசமாக நடிப்பது உங்களை சின்னத்திரையில் எப்படி எல்லாம் பார்த்து கொண்டாடினோம் என வைரல் பாட்டை வைத்து அந்த மங்களகரமான நடிகையை ரொம்பவே ஆபாசமான வார்த்தைகளால் சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் அவரது படக் காட்சிகளையும் படத்தையும் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகையாக தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடிக்க மட்டும் தான் செய்தேன். மற்றபடி ஒன்றுமில்லை என அந்த நடிகை எவ்வளவுதான் சொன்னாலும், அந்த படத்தில் மற்ற நடிகைகளுக்கு கிடைக்காத அளவுக்கு புகழ் வெளிச்சம் மற்றும் ட்ரோல்கள் இந்த நடிகைக்கு மட்டுமே கிடைத்திருப்பது தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
சிரிப்பதா? அழுவதா?: தன்னுடைய நடிப்புக்கும் படத்துக்கும் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் கிடைத்துள்ளதை பார்த்து சந்தோஷப்படுவதா? அல்லது தனக்கு கிடைத்திருக்கும் அவப்பெயரை நினைத்து அழுவதா? என்றே தெரியாமல் பெருங்குழப்பத்தில் அந்த நடிகை சிக்கித் தவித்து வருவதாக கூறுகின்றனர். அதற்கு காரணம் நடிகைக்கு வரும் ஏகப்பட்ட போன் கால்களும் புதுப்பட வாய்ப்புகளும் தான் என்கின்றனர்.
தயாரிப்பாளர்கள் டார்ச்சர்: புது பட வாய்ப்புகள் குவிந்தால் நல்ல விஷயம் தானே என்றால், அதுதான் இல்லையாம். இந்த படத்தில் நடித்ததை விட படு மோசமாக நடிக்கவே பட வாய்ப்புகள் நடிகைக்கு குவிவதாகவும் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகையை நம்ம படத்திலும் கொஞ்சம் போல்டான சீனில் நடிக்க வேண்டும் என்றே பிட்டு போட்டு நடிகையை பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு மாற்றவே முயற்சிப்பதால் ரொம்பவே கவனமாக தனது அடுத்த படத்தை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











