நெருப்பில் வெந்து வேகும் சீரியல் நடிகை.. அசிங்கமான அப்ரோச்.. சினிமாவில் இருந்தே விலகுறாரா?
சென்னை: அந்த நெருப்பு படத்தால் மற்ற நடிகைகளும் நடிகரும் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும் சூழலில் அந்த பிரபல சீரியல் நடிகை மட்டும் எந்தவொரு விழாவிலும் அதன் பிறகு பங்கேற்பதையே தவிர்த்து விட்டார் என்கின்றனர். அதற்கு காரணம் அந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட மனக்கசப்புகளை அவர் சம்பாதித்தது தான் என்கின்றனர்.
சினிமாவில் முன்னணி நடிகைகளாக நடிக்கும் நடிகைகளே ஆடைகளை துறந்தும் ஹாட்டாக லிப் லாக் அடித்தும் நடித்து வருகின்றனர். சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகையாக வேண்டும் என்கிற கனவுகளுடன் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்த அந்த சின்னத்திரை நடிகையும் அதே ரூட்டில் சான்ஸ் கிடைத்தால் போதும் கில்மா படமெல்லாம் கண்டுக்கொள்ள மாட்டேன் என கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்தார்.

ஆனால், படம் வெளியான பின்னர், மற்ற நடிகைகள் மீது பாயாத அளவுக்கு மிகப்பெரிய நெகட்டிவிட்டி குறிப்பாக அந்த மங்களகரமான நடிகையை மட்டும் குறி வைத்து தாக்கியதுதான் நடிகையை ரொம்பவே காயப்படுத்தி விட்டது என்கின்றனர்.
சின்னத்திரை நடிகை: சீரியலில் ஹோம்லியாக நடித்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும். நடுராத்திரி சீனுக்கு கூட உடல் முழுக்க மேக்கப் பவுடரும், பட்டுப்புடவையும், நகைகளையும் அணிந்துக் கொண்டு தான் நடிகைகள் நடித்து வருகின்றனர். நைட்டி அணிந்து நடித்தாலே வீட்டில் சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அசெளகரியமாக இருக்கும் என இப்படியொரு ஏற்பாட்டுடன் சீரியல் இயக்குநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சேலை மற்றும் பாவாடை தாவணி என சுற்றித் திரிந்த அந்த நடிகையை படத்தில் படு கிளாமராக நடிக்க வைத்துள்ளனர்.
எல்லோரும் ஹேப்பி: ஏகப்பட்ட டிவி நடிகர்கள் தான் அந்த படத்தில் நடித்திருந்தனர். நெருப்பு படம் மூலமாக அனைவரும் ஹேப்பியாக அனைத்து கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஓவர் கவர்ச்சியில் ஆட்டம் போட்ட அந்த மங்களகரமான நடிகை ஏன் எதிலும் பங்கேற்கபதில்லை என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் கிளம்ப அதற்கு அவரது தரப்பில் இருந்து வந்து விழுந்த பதில் தான் அதிர்ச்சியை தருகிறது.
பாவம் நடிகை: மற்றவர்களுக்கு ஜோதியாக மாறிய நெருப்பு படம் இந்த நடிகைக்கு மட்டும் கொள்ளியாக மாறியிருப்பதாக கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் கிளம்பிய அதிக வன்மம் காரணமாக நடிகை ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். இந்த படத்துக்கும் எனக்கும் இனிமேல் சம்மந்தம் இல்லை என்கிற முடிவுக்கு நடிகை வந்துவிட்டதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே படக்குழுவினர் ஃபோனில் அழைத்தால் கூட எடுப்பதில்லையாம்.
தேவையற்ற பயம்: கில்மா நடிகை என்றே தன்னை முத்திரை குத்திவிட்டார்கள் என்றும் தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகளுக்கே தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகம் அணுகும் என்கிற அச்சத்தில் தான் சில வாரங்களாக சைலண்ட் மோடுக்கு நடிகை சென்றுவிட்டார் என்கின்றனர். ஆனால், இதெல்லாம் தேவையற்ற பயம் என்றும் வாய்ப்பு கிடைக்கும் போது வாசக்கதவை அடைத்து வைப்பது சரியான யோசனை கிடையாது என சில நண்பர்களே நடிகைக்கு அட்வைஸ் கொடுத்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இன்னொரு பக்கம் நடிகை அடுத்த அடுத்த படங்களில் பிசியாகி விட்டதால் தான் மற்ற நடிகர்களை போல அவரால் வெளியே தலை காட்ட முடியவில்லை என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











