சீரியலில் அப்படி.. நைட் பார்ட்டியில் குடியும் கூத்துமாக இருக்கும் நடிகை.. அதுவும் நாலு பெஸ்டியாம்!

By Staff

சென்னை: சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட சீரியலில் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தினம் தினம் தொலைக்காட்சியில் பார்த்து பழகிப்போன இவர்களை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து வருகின்றனர் இல்லத்தரசிகள். இப்படி பெண்கள் மனதில் இடம் பிடித்த அந்த பிரபல சீரியல் நடிகை தான் பப்பில் நைட்பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டு தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

பிரபலமான தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் இந்த நடிகை,

gossip tv kisu kisu

சீரியல்களில் மட்டும் இழுத்துப்போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடிப்பார். ஆனால், இவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றால், புடவையைத் தவிர அனைத்துவிதமான உடையிலும் அவரின் தரிசனத்தை பார்க்கலாம். இது எல்லாம் சினிமா வாய்ப்பை பெறுவதற்காகத்தான் என்றாலும் இந்த நடிகை கேமராவிற்கு பின் செய்த சேட்டை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீரியல் நடிகை : அந்த பிரபலமான சீரியலில் தனது அழகாலும் அபார திறமையாலும் பெயர் எடுத்த அந்த நடிகை வார நாட்கள் வந்துவிட்டால் பப்புக்கு சென்றுவிடுவாராம். வார இறுதி நாட்களில் நடக்கும் நைட் பார்ட்டியில் குடித்துவிட்டு குத்தாட்டம் போடுவதையே வழக்கமான வைத்து இருக்கிறாராம். இப்படி அடிக்கடி பார்ட்டி சென்றால், அங்கு வரும் சில பெரிய புள்ளிகளின் நட்பு கிடைக்கும் என்று கணக்கு போட்டு, நைட் பார்ட்டிக்கு செல்வதை அம்மணி வழக்கமாக வைத்து இருக்கிறார்.

ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்: அப்படி நைட் பார்ட்டிக்கு செல்வதற்கே கணிசமான பணம் செலவு ஆகும் என்பதால், அந்த பார்ட்டிக்கு அழைத்து செல்வதற்கு என்றே, நாலு பெஸ்டிகள் இருக்கிறார்களாம். இவர்கள், அந்த அம்மணியை நைட் பார்ட்டிக்கு அழைத்து சென்று ஊத்திக்கொடுத்து மீண்டும் வீட்டில் விட்டுவிடுவார்களாம். அப்படி ஒரு நாள் சீரியல் நடிகை குடித்து விட்டு, ஓவர் போதையில் ஆண் நண்பர்களுடன் கூத்தாட்டம் போட்டுள்ளார். இதனால், நான்கு பெஸ்டிக்கும் இடையே வாக்குவாதம் நடந்து இருக்கிறது. அதன் பிறகு ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து நடிகையை, நான்கு பெஸ்டிகளில் ஒருவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

தலைக்கேறிய போதை: இந்த விஷயத்தை ஒரு பெஸ்டி தனது நண்பருடன் பீல் பண்ணி சொல்ல, அந்த விஷயத்தை அந்த நண்பர் பாடி பில்டர் நடிகரிடம் சொல்லி இருக்கிறார். அந்த நடிகரோ, நடிகை குறித்து பேசி காசு பார்த்துள்ளார். இதனால், அந்த நடிகையின் மானம் மொத்தமா கப்பல் ஏறி உள்ளது. பலரும் அட இந்த நடிகையா? இப்படி என்று கேட்டுவருகின்றனர். பட வாய்ப்புக்காக இப்படி நடந்து கொண்டாரா? அல்லது போதை தலைக்கேறி நடந்து கொண்டாரா? என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X