அறிமுகப்படுத்தியவருக்கே கால்ஷீட் தர மறுத்தாரா சேது நடிகர்?
தமிழ் சினிமாவில் இருக்கும் சில நன்றியுள்ளவர்களின் பட்டியலில் அந்த சேது நடிகருக்குதான் முதலிடம் கிடைக்கும். அந்த அளவுக்கு தன்னுடன் ஆரம்ப காலத்தில் உடன் இருந்தவர்களுக்கும் ஆதரித்தவர்களுக்கும் வாய்ப்புகள் வாங்கிக் கொடுக்கிறார்.
அப்படி நடிகரை முதலில் ஹீரோவாக்கிய சாமி இயக்குநருக்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுத்தார். ஒன்று ரிலீஸ் ஆகவில்லை. இன்னொன்று ரிலீஸாகி நன்றாக போனது.

இந்நிலையில் நடிகர் மீண்டும் கால்ஷீட் கொடுப்பார் என்று காத்திருந்தார் இயக்குநர். ஆனால் நடிகர் கையை விரித்து விட்டாராம். இதனால் மைக் வாரிசுடன் இணையவிருக்கிறார் இயக்குநர்.
ஆனாலும் நடிகரை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறார் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











