»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷகீலாவின் பிடியில் ஒரு முக்கிய நடிகையின் முன்னாள் கணவர் சிக்கியுள்ளாராம். உற்சாக பானத்தை ஏற்றிக் கொண்டு இருவரும் மணிக்கணக்கில்கொட்டமடிக்கிறார்கள்.

மலையாளத்தில் கலக்கல் ஆட்டம் போட்ட ஷகீலா இப்போது ப்ரீயாக இருக்கிறார். இதனால் தனக்குப் பொழுது போவதற்காக புதிய நண்பர்களைப்பிடித்து வைத்துள்ளார்.

அவர்களுடன் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அடிக்கடி போய் உற்சாகமாகப் பொழுதைப் போக்கி வருகிறாராம்.

ஷகீலாவுடன் ஒரு முக்கிய நபர் அடிக்கடி வருகிறார். இவர் முக்கிய நடிகையின் முன்னாள் கணவர் ஆவார். இருவரும் சேர்ந்து உற்சாக பானத்தை ஏற்றிக்கொண்டு மணிக்கணக்கில் கொட்டமடிக்கிறார்களாம்.

ஹோட்டல் காரர்களுக்கு இலவசமாகவே படம் பார்க்கும் பாக்கியம் கிடைப்பதால் அவர்கள் என்ன கேட்டாலும் உடனடியாக வருகிறதாம்.

காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா, சாமி!

"அன்புத் தொல்லை"யால் ஷகீலா அவதி:

இதற்கிடையே ஷகீலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் அன்புத் தொல்லை. சின்னரோலாக இருந்தாலும் கவர்ச்சியையும், நடிப்பையும் வாரி வழங்கும் வகையில் அவரது ரோல் அமைந்துள்ளதாம்.

"அன்புத் தொல்லை" படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷகீலாவைப்பார்த்த ரசிகப் பெருமக்கள் உற்சாகத்துடன் உணர்ச்சியால் தூண்டப்பட்டனர்.

ஷகீலாவை நெருங்கி தங்களது அன்பைக் காட்ட ரசிகர்கள் காட்டிய ஆவேசம் படப்பிடிப்புக் குழுவினரைரொம்பவே பயறுத்தி விட்டதாம்.

இதையடுத்து ஷகீலாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஷூட்டிங்கையே கேன்சல் செய்து விட்டு ஊர்திரும்பி விட்டார்களாம். அந்தக் காட்சிகளை இன்டோரிலேயே முடித்துக் கொள்ளலாமா என்றும் இப்போதுஆலோசனை நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil