»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

ஷகீலா நடித்த மலையாளப் படம் தமிழுக்கு இறக்குமதியாகிறது. படத்தின் பெயர் "ஐஸ்கிரீம் பெண்ணே".

மலையாளப் படம், அதுவும் ஷகீலாவின் படம் என்பதால் அப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் இருக்கும் என்று தயவு செய்து ஜொள்ளு விட்டு விடாதீர்கள்.

முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு படிப்பினையூட்டும் படமாக இதை எடுத்திருக்கிறார்களாம். மலையாளத்தில் இந்தப் படம் சக்கை போடு போட்டதாம்.

படத்தில் அசைவக் காட்சிகள் ரொம்பவும் கம்மியாம். இருந்தாலும் தன்னை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரக் கூடாதுஎன்பதற்காக ஓரளவு கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம் ஷகீலா.

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இந்தக் கால இளைஞர்களுக்கு கற்றுத் தருவதே இந்தப் படத்தின் கதையாம்.

இதெல்லாம் சரி... பின் வரும் "அதி முக்கியமான" தகவல்களால் யாருக்கு, என்ன பயன் என்று நீங்களே முடிவு செய்து கொல்லுங்கள்:

சிம்ரன் தினசரி காலை சிறிது தேனுடன், எலுமிச்சம் பழ சாற்றை கலந்து குடிக்கிறார். இதனால் உடல் சுத்திகரிக்கப்படுவதோடு, உள்ளத்திற்கும்குளுமையாக இருக்குமாம்.

தேவயானியின் கையால் சாப்பிடுவதைத் தனது பெரும் பாக்கியமாக கருதுகிறாராம் ராஜகுமாரன். அத்தனை டேஸ்ட்டாம் அம்மணியின் சமையல்.குறிப்பாக முட்டை வறுவல், பொறியல் போன்றவற்றில் தேவயானி எக்ஸ்பர்ட்டாம்.

பிள்ளையார் என்றால் ரம்பாவுக்கு ரொம்ப இஷ்டமாம். சாமி கும்பிடும்போது பேசிக் கொண்டே வேண்டிக் கொள்வாராம்.

ரீமா சென் மீன் குழம்பு வைத்தால் அடுத்த நொடியே காலியாகி விடுமாம். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்குமாம்.

பார்த்திபனுடன் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சீதா, அதேசமயம், தனக்கும் வேறு யாருக்கும்எந்தவிதமான தவறான தொடர்பும் இல்லை என்று அடித்துக் கூறி வருகிறாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil