»   »  ஷகீலா போடும் புது குண்டு !

ஷகீலா போடும் புது குண்டு !

Subscribe to Oneindia Tamil

"மதமதத்த" தனது கவர்ச்சி புயலால், மலையாள சினிமா ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்த ஷகீலா புதியகுண்டைப் போட்டுள்ளார்.

தான் சந்தித்த அரசியல்வாதிகள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் குறித்து விரைவில் புத்தகமாக வெளியிடப்போகிறேன் என ஷகீலா பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.

மலையாளப் படவுலை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் கலக்கியவர் ஷகீலா. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி,மோகன் லால் ஆகியோரது படங்களை விட ஷகீலா நடித்த படங்கள்தான் அங்கு சக்கை போடு போட்டன. ஒரு கட்டத்தில் ஷகீலாபடம் மட்டுமே ஓட முடியும் என்ற நிலையும் ஏற்பட்டது.

ஷகீலா அலையில் சிக்கி, தடுமாறிய மலையாள நடிகர்கள், கேரள அரசிடம் முறையிடும் அளவுக்கு நிலைமை போனது.அவர்களது மறைமுக மிரட்டல்களால் கேரளாவிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார் ஷகீலா. இப்போது அதிக மலையாளப்படங்களில் நடிப்பதில்லை. தமிழ்ப் படங்களில் காமடி வேடங்களிலும், சின்னச் சின்ன வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சிறிது காலம் அமைதியாக இருந்த ஷகீலா இப்போது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த முறை ஷகீலா சிலருக்குகிலியூட்டும் வகையில் பேசியுள்ளதால்தான் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மலையாளப் பத்திரிக்கை ஒன்றுக்கு ஷகீலா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் வயதுக்கு வந்தது முதல் பல்வேறுஅரசியல் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகப் பிரமுகர்க்ளை பார்த்துள்ளேன். அவர்களால் நான் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளேன்.

யார் யார் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார்கள், என்னுடைய வீட்டுக்கு யார் யார் வந்தார்கள், என்ன மாதிரியான தொல்லைகள்எனக்குக் கொடுத்தார்கள் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த ரகசியத்தை நான் விரைவில் வெளியிடப் போகிறேன்.புத்தகமாக எனது அனுபவங்களை எழுதப் போகிறேன்.

என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்து ஒருவர் விடாமல் எனது புத்தகத்தில் புட்டுப் புட்டு வைக்கப் போகிறேன். இதைஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனது அனுபவங்கள் சினிமாவுக்கு வர நினைக்கும், இளம் பெண்களுக்கு நல்லபாடமாக, வழிகாட்டியாக அமையும் என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று கூறியுள்ளார் ஷகீலா.

ஷகீலாவின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக கேரள மாநில அரசியல்வாதிகளிடையே பெரும் பீதியைஏற்படுத்தியுள்ளது. ஷகீலாவுடன் தொடர்பு வைத்திருந்த பலரும் தங்களைப் பற்றி ஷகீலா என்ன எழுதப் போகிறாரோ என்றஅச்சமடைந்துள்ளனர்.

ஆனால் ஷகீலாவின் ரசிகர்களுக்கு அவரது பேட்டி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஷகீலாவின் அனுபவங்களை தெரிந்துகொள்ள அவர்களிடையே சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது. இதுவரை பிட்டு பிட்டாக பார்த்து வந்த ஷகீலாவின் மறுபக்கத்தைமுழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்துள்ளது.

ஷகீலாவின் மலையாளப் படங்களை விட படு திரில்லாக அவரது புத்தகம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil