»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி நடிகை ஷர்மிலிக்கும் காதல் வந்துவிட்டது. அதே போல தனது பெருத்த உடம்பால் ஆட்டம் போடமுடியாமல் தவித்து வரும் ராதிகா செளத்ரியும் காதலில் விழுந்துவிட்டார்.

துணை நடன நடிகையாக இருந்து, சிங்கிள் டான்ஸ்களுக்கு ஆடி, கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து, அவருடன்கிசுகிசுக்கப்பட்டு, மலையாளத்துக்குப் போய், அங்கு பலான படங்களில் நடித்து, ஷகீலா இல்லாத குறையைதீர்த்துக் கொண்டிருப்பவர் ஷர்மிலி.

இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் காதலாம். இந்தக் காதலர் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார்.சென்னையின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானதில் இருந்தே காதலாம். இருவரும் அடிக்கடி சென்னையிலும்திருவனந்தபுரத்திலும் சந்தித்து வருகின்றனர்.

விரைவில் அவரை கல்யாணம் கட்டிக்கவும் திட்டமிட்டுள்ளாராம் ஷர்மிலி. கல்யாணமானாலும் நடிப்பை (?)ஷர்மிலி தொடர்வாராம்.

இது இன்னொரு காதல்:

ஹீரோயினாக அறிமுகாகி, சிங்கிள் டான்சுக்கு வந்து, இப்போது கன்னடத்தில் லோ-பட்ஜெட் ரகப் படங்களில்நடித்து வரும் ராதிகா செளத்ரியும் காதலில் இருக்கிறாராம். உடம்பு பலூனாக ஊதிவிட்டதால் ஆட முடியாமல்கஷ்டப்பட்டு வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கும் இவர் விரைவில் டும் டும் கொட்டிவிடதீர்மானித்துள்ளார்.

அதே நேரத்தில் தனது தங்கையை எப்படியாவது கோடம்பாக்கத்தில் தள்ளிவிடும் முயற்சியில் இருக்கிறார்.அடிக்கடி தனது தங்கையுடன் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் அலுவலகங்களில் இவரைப் பார்க்க முடிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil