உச்ச நடிகரை மூத்த நடிகை பிரிந்ததற்கு காரணம் இந்த நடிகைதான் போல! பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: திருமணம் செய்துகொள்ளாமல் உச்ச நடிகருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகை அவரை பிரிந்ததற்கான காரணம் இதுதான் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழி படங்களில் நடித்து விட்டார். இன்று வரையும் நிற்க நேரமில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.
எந்த கெட்டப்பாக இருந்தாலும் அசால்ட்டாக அசத்தும் அந்த நடிகர் தனது இளமைக்காலத்திலேயே உடன் நடிக்கும் நடிகைகளும் கிசுகிசுக்கப்பட்டவர். இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தான நடிகருக்கு இரண்டாவது நடிகரின் முலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மூத்த நடிகையுடன்
விவாகரத்துக்கு பின்னர் நடிகை ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் நடிகர். தன்னுடன் 80 களின் பிற்பாதியும் 90 களின் முற்பாதியிலும் நடித்த அந்த நடிகையுடன் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்தார்.

திடீர் பிரிவு
10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகருடன் வாழ்ந்து வந்த அந்த நடிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகரும் தாமும் பிரிவதாக கூறி குண்டை தூக்கிப் போட்டார். இதனால் கோலிவுட்டே ஒரு கணம் அதிர்ந்து போனது.

பிரிய காரணம்
நடிகை திடீரென நடிகரை பிரிந்ததற்கு அவருடன் புதிதாக சேர்ந்த ஒரு நடிகைதான் என்று கூறப்பட்டது. நடிகரே இயக்கி நடித்த படத்தில் ஜோடி போட்ட அந்த மங்களகரமான நடிகைக்கும் நடிகருக்கும் நெருக்கம் அதிகரித்ததே மூத்த நடிகை பிரிய காரணம் என பேசப்பட்டது.

ஒதுங்கிய நடிகர்
அதோடு அந்த படத்தின் போது மூத்த நடிகைக்கும் நடிகருடன் ஜோடி போட்ட நடிகைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் காரணம் என்றும் இதில் நடிகர், ஒரு சார்பாக நடந்துகொண்டதாகவும் பேசப்பட்டது.

குடும்பத்தில் ஒருத்தி
இந்நிலையில் உச்ச நடிகருடன் அந்த மங்களகரமான நடிகை நெருக்கத்துடன் இருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது. குடும்ப விழாவிலும் பங்கேற்ற நடிகை குடும்பத்தில் ஒருத்தி என சொல்லாமல் சொல்கிறாரா என்றும் பேச்சுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இவர்தான் காரணமா?
நடிகையை பார்த்த ரசிகர்கள், நடிகர் புதுசாய் சேர்த்திருப்பது இவரைதானா என கேட்டு வருகின்றனர். மேலும் முன்னாள் ஜோடியும் மூத்த நடிகையுமான அவர் உச்ச நடிகரை பிரிய இவர்தான் காரணம் என்றும் கிசுகிசுத்து வருகிறார்கள் கோலிவுட்டைச் சேர்ந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











